Author Topic: ~ சேனைக்கிழங்கு அவியல் ~  (Read 307 times)

Offline MysteRy

~ சேனைக்கிழங்கு அவியல் ~
« on: February 17, 2016, 09:30:55 PM »
சேனைக்கிழங்கு அவியல்



தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு – 2 கப் (தோலுரித்து, துண்டுகளாக்கப்பட்டது)
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மசாலாவிற்கு…
துருவிய தேங்காய் – 1 கப்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் மசாலாவிற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சேனைக்கிழங்கை போட்டு, அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, சேனைக்கிழங்கு வேகும் வரை கொதிக்க விட்டு இறக்கி, நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளிச்சாறு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி, அத்துடன் சேனைக்கிழங்கையும் சேர்த்து பச்சை வாசனை போக மற்றும் தண்ணீர் சற்று குறையும் வரை வேக வைக்க வேண்டும்.
பின்பு அதில் உப்பு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம் நன்கு வேக வைக்கவும்.
அதற்குள் மற்றொரு சிறு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து தாளித்து, அதனை சேனைக்கிழங்குடன் சேர்த்து கிளறினால், சேனைக்கிழங்கு அவியல் ரெடி!!!