Author Topic: ~ கொண்டைக்கடலை மசாலா ~  (Read 317 times)

Offline MysteRy

~ கொண்டைக்கடலை மசாலா ~
« on: February 16, 2016, 09:55:37 PM »
கொண்டைக்கடலை மசாலா



தேவையான பொருட்கள்

கொண்டைக்கடலை – 2 கப்
தேங்காய் – அரை மூடி
மிளகாய் வற்றல் – 5
கொத்தமல்லி விதை – 2 மேசைக்கரண்டி
இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
பூண்டு – 8 பல்
கிராம்பு – 2
இலவங்கப்பட்டை – ஒரு அங்குலத் துண்டு
மிளகு – அரைத் தேக்கரண்டி
மஞ்சள்பொடி – அரைத் தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – கால் கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – 4 தேக்கரண்டி

செய்முறை

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்துவிடவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
ஊறவைத்து எடுத்த கொண்டைக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு அதனுடன் மஞ்சள்பொடி மற்றும் உப்பு சேர்த்து கலக்கிக் வேகவைக்கவும்.
சுமார் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு வேகவைத்து, கடலை நன்கு வெந்ததும் இறக்கிவிடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காயவிடவும். காய்ந்ததும் அதில் மிளகாய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, லவங்கபட்டை, மிளகு, கொத்தமல்லி விதை ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து தனியே எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
அதனுடன் தேங்காய்த் துருவலைச் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
தேங்காய்த் துருவலுடன் வறுத்து வைத்துள்ள பொருட்களையும் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மீண்டும் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வேகவைத்த கொண்டைகடலை, அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.
கறிவேப்பிலையைத் தூவி இறக்கிவிடவும்.