Author Topic: ~ வெஜ் ரோல் ~  (Read 317 times)

Offline MysteRy

~ வெஜ் ரோல் ~
« on: February 15, 2016, 09:26:48 PM »
வெஜ் ரோல்



தேவையானவை:

மெல்லியதாக நறுக்கிய கோஸ், குடமிளகாய், வெங்காயம் மற்றும் துருவிய கேரட் – தலா அரை கப், ஆலிவ் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், உப்பு – சிறிதளவு, சப்பாத்தி – 4, சீரகம் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

கடாயில் ஆலிவ் எண்ணெயை லேசாகச் சூடு செய்து, சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக வதக்கவும். நறுக்கிவைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து, பச்சை வாடை போக வதக்கி, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். ஏற்கெனவே தயாரித்துவைத்திருக்கும் சப்பாத்தியின் மேல், இந்தக் காய்கறிக் கலவையை வைத்து ரோல் செய்ய வேண்டும். ஆரோக்கியமான காய்கறி ரோல் தயார்.
குறிப்பு: ஊட்டச் சத்துமிக்க இந்த ரோல், ஆரோக்கியமானது. குடமிளகாய் உடல் எடைக் குறைப்புக்கு உதவும்