Author Topic: ~ கால் ஆணி பிரச்சனைக்கு தீர்வு தரும் உப்பிலாங் கொடி ~  (Read 580 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226753
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கால் ஆணி பிரச்சனைக்கு தீர்வு தரும் உப்பிலாங் கொடி



தோட்டத்தில், சாலையோரம் உள்ள மரங்களில் படர்ந்திருக்கும் உப்பிலாங் கொடி, தடிமனான முட்டை வடிவில் இருக்கும். உடைத்தால் உடையக் கூடிய இந்த உப்பிலாங் கொடியில் நீர்சத்து அதிகம். குழந்தைகளுக்கு ஏற்படும் மந்தத்தை போக்கும்.

உப்பிலாங் கொடியை வதக்கி பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் சாற்றில், காய்ச்சிய பசும்பால் ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும். அதனுடன் கற்கண்டு பொடி சேர்க்கவும். ஒரு ஸ்பூன் அளவுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் குழந்தைக்கு கொடுத்துவந்தால் மந்தத்தினால் ஏற்படும் கழிசல், உப்புசம் சரியாகும்.
உப்பிலாங் கொடி இலை, ஒரு சிட்டிகை சுக்குப்பொடி, கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்து வதக்கி கொதிக்க வைக்க வேண்டும். இதை சாப்பிட்டால் உப்பினால் ஏற்படும் கை, கால்களில் வீக்கம், உடல் சோர்வு சரியாகும். சாலையோரம் கிடைக்கும் உப்பிலாங்கொடியை சேகரித்து வைத்து கொண்டு அதை பயன்படுத்தலாம். கொடியை உலர்த்தி வைத்துக் கொள்ளலாம். உப்பிலாங்கொடி நுண் கிருமிகளை அழிக்க கூடியது. மூட்டுவலிக்கு மேல்பத்தாகவும் இதை பயன்படுத்தலாம்.
விளக்கெண்ணெய்யுடன் இலையை வதக்கி வலி, வீக்கம் இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் வலி சரியாகும். கால் ஆணி, மருக்களை போக்கும் தன்மை கொண்டது. உப்பிலாங் கொடி இலைசாறு, சம அளவு நல்லெண்ணை, மஞ்சள் பொடி சேர்த்து தைலபதத்தில் காய்ச்சி எடுத்து கொள்ள வேண்டும். இதை பாட்டிலில் வைத்துகொண்டு கால் ஆணி, மருக்கள் உள்ள இடங்களில் பூசலாம். தோலின் மேல் பகுதியில் ஏற்படும் தொல்லைகள், மருக்கள் ஆகியவற்றை சரிசெய்யும் உப்பிலாங்கொடி, வேர்க்குருவை போக்கும் தன்மை கொண்டது.