Author Topic: ~ கோதுமை பரோட்டா ~  (Read 372 times)

Offline MysteRy

~ கோதுமை பரோட்டா ~
« on: February 14, 2016, 08:58:54 PM »
கோதுமை பரோட்டா



தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கப், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, உப்பு – சிறிதளவு.

செய்முறை

கோதுமை மாவில் உப்பு சேர்த்து, ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துப் பிசிறவும். இதனுடன் தேவையான தண்ணீர் சேர்த்து, 10 நிமிடம் அழுத்தி பிசையவும். பிறகு, மாவை மூடி வைத்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் நெய்யை சேர்த்துக் குழைத்துக் கொள்ளவும்.
பிசைந்து வைத்த மாவை சப்பாத்திபோல் திரட்டி, அதன்மேல் அரிசி மாவு – நெய் கலவையை பரவலாக தடவி புடவை மடிப்புபோல முன் பின்னாக மடித்து அதனை வட்ட வடிவில் சுருட்டிக் கொள்ளவும். பிறகு, இதனை பரோட்டாவாக இடவும். பரோட்டாவை சூடான தோசைக்கல்லில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நெய் விட்டு, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
நெய்க்குப் பதில் எண்ணெயும் உபயோகிக்கலாம்.