Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ மொகல் பிரியாணி ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ மொகல் பிரியாணி ~ (Read 360 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 223464
Total likes: 27963
Total likes: 27963
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ மொகல் பிரியாணி ~
«
on:
February 12, 2016, 10:33:44 PM »
மொகல் பிரியாணி
தேவையானப் பொருட்கள்:
1. நயமான சீரக சம்பா அல்லது பாஸ்மதி அரிசி- 11/2 கிலோ
(அரிசி தாங்க ரொம்ப முக்கியம்! புது அரிசியா இருந்தா போச்சு…சோறு கொழஞ்சு கஞ்சியாகிடும்!
நல்ல பழைய அரிசியா பாத்து வாங்கிடனும். அதோட சீரக சம்பாவுக்கு..1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணி..பாஸ்மதின்னா 1 கப் அரிசிக்கு..11/2 கப் தண்ணி தான் அளவு)
2.11/2 கிலோ ஆட்டிறைச்சி
(அரிசிக்கு மேல கறி போடனும்..அதாவது 11/2 கிலோ அரிசிக்கு 2 கிலோ இறைச்சி..இல்லாட்டி..சரிக்கு சரியாவது போடனும்)
3.பெரிய வெங்காயம்-1 கிலோ
(நீளமா, மெல்லிசா வெட்டிக்கணும்)
4.தக்காளி- 1 கிலோ
(துண்டங்களாக வெட்டிக்கணும்)
5. பட்டை, கிராம்பு ,ஏலம்- மூன்றும் சேர்த்து அரைத்த பொடி 1/2 கப்
6. புதினா- ஒரு பெரிய கட்டு
( ஆய்ந்து, கழுவி வைத்துக் கொள்ளவும் )
7. மல்லித்தழை- ஒரு பெரிய கட்டு
(ஆய்ந்து , கழுவி வைத்துக் கொள்ளவும்)
8. இஞ்சி, பூண்டு விழுது-1 1/2 கப்
9. தயிர்- 2 கப்
10. எண்ணை- 2 கப்
11. நெய்- 1 கப்
12. ப.மிளகாய்- 5 (அ) 6
13. தேங்காய்ப் பால் -அரை மூடி துருவி, பால் பிழிந்தது, 1 கப்
14. மிளகாய்த் தூள்- 2 லிருந்து 4 ஸ்பூன் வரை தேவைக்கேற்ப
15. உப்பு – தேவைக்கேற்ப
16. 2 எலுமிச்சை பழங்களின் சாறு…
செய்முறை :
1*அடுப்பில் 12 லி குக்கரை ஏற்றி பாதி நெய்யையும் எல்லா எண்ணையையும் விடவும்.
2*காய்ந்ததும், பட்டை கிராம்பு ஏலப் பொடியைப் போடவும்.
3* பிறகு ப.மிளகாய், வெட்டிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
4*உடனே புதினா, மல்லி போட்டு வதக்கி, கறியையும் சேர்க்கவும்.
5* கறியோடு 1 மேஜைக் கரண்டி உப்பு சேர்க்கணும்.
(இங்க தாங்க மொகல் பிரியாணியோட ரகசியம் ஒண்ணு கவனிக்கணும். இறைச்சியிலிருந்து அதனுடைய ஊண் தண்ணி என்று சொல்லக் கூடிய நீர் தானாகப் பிரிஞ்சு வற்றும் வரையில வேற எதுவும் போடாம வதக்கணுங்க . அப்ப தான் நல்ல ருசி கிடைக்கும்.)
6* பிறகு, தக்காளி சேர்த்து, மிளகாய்த்தூள் சேக்கணும், தக்காளி கரஞ்சு, காரம் மேல மிதக்கும் போது இஞ்சி பூண்டு விழுது சேத்து , பச்சை வாடை போகும் வரை வதக்கணும்.
7*அப்பறம் தயிர் சேத்து, தேவைப் பட்டால், கொஞ்சம் போல் தண்ணி சேத்து கிளறி வெயிட் போட்டு குக்கரை மூடவும்.
8* சத்தம் வந்து குறைத்து வைத்து, 10 நிமிடம் கழித்து திறக்கவும்.
9*இப்போ தேங்காய்ப் பாலும் தண்ணீருமா சேத்து, 11/2 கிலோ அரிசிக்கு (சீரக சம்பா-சுமாரா 14- 15 கப்)(பாஸ்மதி- 10-11 கப்) தண்ணீர் சேத்து, ஒரு கொதி வரும் முன்ன , கலஞ்சு, ஊற வச்சு இருக்குற அரிசிய , துளி தண்ணி இல்லாம வடிச்சு, போடவும்.
10*அரிசியும் மசாலா தண்ணியுமா கொதிக்க ஆரம்பிக்கும்.
கொஞ்ச நேரத்துல தண்ணியும் சோறுமா வற்றும் நேரத்தில் (ருசி பாத்து உப்பு, காரம் சேத்துக்கலாங்க) எலுமிச்ச சாறு சேர்த்து மீதம் உள்ள நெய்யையும் சேர்க்கணும்.
11*. நன்றாக கிளறி குக்கர் மூடி போட்டு வெய்ட்டையும் போட்டு, மூடி, தீயைக் குறைத்து வைத்து விடுங்கள்.
12* பத்தே நிமிஷத்துல மணக்கும் மொகல் பிரியாணி ரெடி.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
சமையல் கலசம்
»
~ மொகல் பிரியாணி ~