Author Topic: ~ ஶ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா...!! ~  (Read 322 times)

Online MysteRy

ஶ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா...!!



தேவையானவை:

பால்-10 லிட்டர் & சீனி ஒரு கிலோ.

செய்முறை;

பத்து லிட்டர் பாலுக்கு ஒரு கிலோ சீனி என்பது திரு. சுப்புராம் அவர்களின் கணக்கு. மற்றவர்கள் சுவைக்காக அதிகம் சேர்க்கின்றார்கள் என்கின்றார். நல்ல தரமான பசும்பாலாக இருக்க வேண்டும். பாலின் அடர்த்தி மிகவும் அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். இதற்கு சற்று அனுபவம் தேவை.

*****************************************************************************

அடிக் கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, சீனியையும் சேர்த்து சீரான தீயில் கொதிக்க விடவும். பால் நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் ஒரு பெரிய கரண்டி, அல்வா கிண்டுவதற்கு தகுந்தாற்போல் உள்ள கரண்டியைக் கொண்டு, விடாது கிளற வேண்டும். பால் தீய்ந்து விடக்கூடாது, தீயின் அளவு சீராக இருக்க வேண்டும்.

******************************************************************************

கிளறும்போது, பாத்திரத்தின் ஓரத்தில் படியும் பாலாடையை வழித்து, கொதிக்கும் பாலிலேயே கலந்து விடுமாறு கிளறவும். பத்து லிட்டர் பால் சுண்ட சாதாரணமாக 45 நிமிடங்கள் ஆகும். பால் நன்கு திரண்டு சுண்டும் வரை விடாது கிளறவும். பால் நன்கு சுண்டி, அள்ளும் பதத்திற்கு வந்தவுடன், தீயின் அளவைக் குறைத்து விடவும்.

பிறகு பாத்திரத்தை அடுப்பின் ஓரத்தில், அதாவது தீ லேசாக பாத்திரத்தில் படுமாறு வைத்துக் கொண்டு, அந்த மிதமான சூட்டிலேயே, பாத்திரத்தையும் மெதுவாக சுழற்றி சுழற்றி, கோவாவினை மீண்டும் சிறிது நேரம் கிளற வேண்டும், மெதுவாக ஆற வைப்பதற்கு இம்முறையை கடைபிடிக்கின்றனர். இவ்வாறு செய்தால்தான் பால்கோவா நன்கு பதமாக வரும்.

கோவா நன்கு திரண்டு வந்ததும், இறக்கி, தட்டில் கொட்டி மேலும் ஆறவிடவும். இது சுமார் 15 நாட்களுக்குக் கெடாமல் இருக்கும். சீனி சேர்க்காமல் செய்யப்படும் கோவா ஒரு நாள்தான் தாங்கும். சீனி சேர்க்காமல் செய்யப்படும் கோவாதான் அனைத்து வகையான பால் இனிப்புகள் (Milk sweets) செய்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது