Author Topic: ~ கார்ன் ஊத்தப்பம் ~  (Read 346 times)

Offline MysteRy

~ கார்ன் ஊத்தப்பம் ~
« on: February 10, 2016, 10:44:03 PM »
கார்ன் ஊத்தப்பம்



தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி – 200 கிராம்
உளுத்தம்பருப்பு – ஒரு கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
சோளம் – 2
எண்ணெய் – 100 மில்லி
உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் மூன்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து அரைக்கவும்.
சோளத்தை உரித்து முத்துக்களை எடுத்து தனியாக அரைத்து, மாவுடன் கலந்து, உப்பு சேர்க்கவும். தோசைக்கல்லில் மாவை உற்றி தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக ஆனதும் எடுக்கவும்.