Author Topic: ~ சிக்கன் மலாயி ~  (Read 312 times)

Online MysteRy

~ சிக்கன் மலாயி ~
« on: February 07, 2016, 10:25:39 PM »
சிக்கன் மலாயி



கோழி – 500 கிராம்
கறி மசாலா தூள் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – 2ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
வெங்காயம் – 2
காய்ந்த மிளகாய் – 15
பூண்டு(சிறியது) – பாதி
எலுமிச்சை பழம் – பாதி
உப்பு – 1 ஸ்பூன்

செய்முறை

1.முதலில் கோழிகறியை சுத்தம் செய்து மசாலாத்தூள்,மிளகாய் தூள்,இஞ்சிபூண்டு விழுது, 1 ஸ்பூன் உப்பு அனைத்தையும் போட்டு 1/2மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய்ந்த மிளகாயை லேசாக சூடுபடுத்திய வெந்நீரில் 15 நிமிஷம் ஊறவைத்து, அதை கீறிவிட்டு உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிடவேண்டும்.
2.பிறகு வெங்காயம்,பூண்டு,விதை நீக்கிய மிளகாய் மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
3.மசாலாவில் ஊறவைத்த கோழிக்கறியை, கடாயில் லேசாக எண்ணெய் விட்டு பொன்னிறமாக பொரித்துக் கொள்ளவேண்டும்.
4.பிறகு பொரித்த கோழித் துண்டுகளோடு அரைத்து வைத்துள்ள விழுதையும் ஊற்றி, மீதியுள்ள 1 ஸ்பூன் உப்பை தூவி 2 அல்லது 3 நிமிஷம் கிளறி விடவேண்டும்.
5.வெங்காயம்,பூண்டின் பச்சை வாடை மாறியதும் எலுமிச்சை பழத்தை அதன் மீது பிழிந்து விட்டு உடனே இறக்கி, சூடாக பரிமாறவும்.
« Last Edit: February 07, 2016, 10:29:06 PM by MysteRy »