Author Topic: ~ மலபார் மீன் குழம்பு ~  (Read 380 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227473
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ மலபார் மீன் குழம்பு ~
« on: February 07, 2016, 10:20:53 PM »
மலபார் மீன் குழம்பு



கடல் மீன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
தக்காளி – 200 கிராம்
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

அரைக்க :

தேங்காய் – ஒரு மூடி
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2

தாளிக்க :

சீரகம், கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

1. மீனைச் சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு சட்டியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். தொடர்ந்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
2. பிறகு மஞ்சள் தூள், தனியாத்தூள், மிளகாய்த் தூள், அரைத்த மசாலா, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதிக்கும் போது மீனை ஒவ்வொன்றாக எடுத்துப் போடவும். மீன் வெந்த பிறகு குழம்பை இறக்கி விடவும். சுவையான மலபார் மீன் குழம்பு ரெடி.