Author Topic: ~ வாழைப்பூ முட்டை பொரியல் ~  (Read 333 times)

Online MysteRy

வாழைப்பூ முட்டை பொரியல்



தேவையானவை:

வாழைப்பூ-1
முட்டை-2
சின்ன or பெரிய வெங்காயம் -1 கப் பொடிதாக கட் செய்தது
வரமிளகாய்-2
சீரகம்-சிறிது
கடுகு,உளுந்து,கருவேப்பிலை
மஞ்சள்தூள்-சிறிது
மிளகுத்தூள்-சிறிது
சீரகப்பொடி-சிறிது

செய்முறை

வாழைப்பூவை சுத்தம் செய்து நரம்பு நீக்கி ,மோர் தண்ணீர் or சிறிது மஞ்சள் சேர்த்த தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்தால் ,கருக்காது,சிறிது உவர்ப்பு சுவை நீங்கும்.
கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்த உடன் கடுகு,உளுந்து, சீரகம் வரமிளகாய் கருவேப்பிலை போட்டு தாளித்து பின் பொடிதாக கட் செய்து வைத்து இருக்கும் வெங்காயத்தை போட்டு சிறிது உப்பு சேர்த்து வதக்கி ,பின்வெங்காயம் வதக்கிய உடன் சுத்தம் செய்து வைத்து இருக்கும் வாழைப்பூ ,மஞ்சள் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக வைத்தால்,சிறிது நேரத்தில் நன்றாக வெந்து விடும் .
இப்போது முட்டையை உடைத்து ஊற்றி சிறிது மிளகுத்தூள், சீரகப்பொடி போட்டு நன்றாக வதக்கினால் ருசியான வாழைப்பூ முட்டை பொரியல் ரெடி.இது ரசம்,குழம்பு சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு

வாழைப்பூ வாங்கும்போது நாட்டுப்பூ வாங்க வேண்டும்.ரஸ்தாளி பூ நீங்கள் எத்தனை முறை கழுவினாலும் மிகவும் அதிக துவர்ப்பு தன்மை உடன் இருக்கும்.
வாழைப்பூ வாங்கும்போது ஒரு இதழை எடுத்து சுவைத்து பார்த்தால் நல்ல பூ என்றால் துவர்ப்பு சுவை அதிகம் தெரியாது. ரஸ்தாளி பூ இதழை வாயில் வைத்த உடன் உங்களுக்கு உடனே துப்ப தோன்றும் அதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
2 இந்த முறையில் செய்தால் குழந்தைகளை எளிதாக வாழைப்பூவை சாப்பிட வைக்கலாம்