Author Topic: ~ முழு கத்திரிக்காய் முட்டை கூட்டு ~  (Read 350 times)

Offline MysteRy

முழு கத்திரிக்காய் முட்டை கூட்டு



தேவையானவை

சின்ன முழு கத்தரிகாய் – 4
அவித்த முட்டை – 4
டொமேட்டோ பேஸ்ட் – 135 கிராம்
பாக்கெட் சிவப்பு மிளகாய் தூள் -முக்கால் தேக்கரண்டி
தனியா(கொத்துமல்லி) தூள் -ஒன்னறை தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் தூள் – கால் தேக்க‌ர‌ண்டி
உப்பு – தேவைக்கு
தாளிக்க‌ எண்ணை – 4 தேக்கரண்டி
க‌டுகு – அரை தேக்க‌ர‌ண்டி
மிள‌கு – 7
வெந்த‌ய‌ம் – கால் தேக்க‌ர‌ண்டி
பூண்டு -முன்று ப‌ல்
வெங்காயம் – ஒன்று பெரியது
க‌ருவேப்பிலை – முன்று ஆர்க்
ப‌ச்ச‌ மிள‌காய் – ஒன்று
கொத்துமல்லி தழை கடைசியாக மேலே தூவ‌

செய்முறை

1.முட்டையை கழுவி ஒரு பத்திரத்தில் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி 7 லிருந்து பத்து நிமிடத்தில் வேகவைத்து ஓட்டை பிரித்து (வீட்டு ஓட்டை இல்லை) முழுசா நாலா பக்கமும் கீறி வைக்கவும். தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கத்திரிக்காயை கழுவி அதையும் முழுசாக நாலாபக்கமும் கீறி சேர்த்து வதக்கவும்.
2.லேசாக வதஙகியதும் தக்காளி பேஸ்ட்,மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு தூள்,தனியாதூள் சேர்த்து நன்கு கிளறிதேவைக்கு தண்ணீர் சேர்த்து முடி போட்டு வேக விடவும்.
3.வெந்ததும் அவித்த முட்டையையும் சேர்த்து கொதிக்கவிட்டு இரக்கவும். கொத்து மல்லி தழை தூவி பரிமாறவும். இது குஸ்கா, பிரியாணி, பிளெயின் சாதத்திற்கு தொட்டு கொள்ள நல்ல இருக்கும்.
டொமேட்டோ பேஸ்ட் கிடைக்காதவர்கள், பழுத்த ரெடி தக்காளி இரண்டு அரைத்து சேர்க்கவும். இது பிரியாணிக்கு தயாரிக்கும் எண்ணை கத்திரிக்காய் போல் சிறிது மாற்றம் , பிரியாணிக்கு தொட்டு கொள்ளும் எண்ணை கத்திரிக்காய் பிறகு முடிந்த போது போடுகிறேன்