Author Topic: ~ கொத்தமல்லி சட்னி ~  (Read 296 times)

Offline MysteRy

~ கொத்தமல்லி சட்னி ~
« on: January 29, 2016, 10:11:43 PM »
கொத்தமல்லி சட்னி



கொத்துமல்லி தழை – ஒரு கட்டு
லெமன் – அரை டேபிள் ஸ்பூன்
பெரிய பச்சை மிளகாய் – ஒன்று
இஞ்சி துறுவல் – கால் டேபிள் ஸ்பூன்
தேங்காய் துறுவல் – இரண்டு மேசை கரண்டி
வெங்காயம் – சிறியது ஒன்று
பொட்டு கடலை – அரை கப்
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

1.கொத்து மல்லி தழையை மண்ணில்லாமல் கழுவி எடுத்து கொள்ள வேண்டும் .
2.மிக்சியில் பொட்டுகடலை,பச்சமிளகாய், தேங்காய் இது முன்றையும் சேர்த்து அரைக்கவும்.
3.பின்னர் இஞ்சி துறுவல், லெமன் சாறு,உப்பு,வெங்காயம் சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்.தேவைப்பட்டால் கடுகு ,உளுந்து ,சிறிது பெருங்காயம் தாளித்து பரிமாறலாம்.சுவையான கொத்தமல்லி சட்னி தயார்.தோசை,இட்லிக்கு பொருத்தமானவை.