Author Topic: ~ மேங்களூரியன் நெய் சாதம் ~  (Read 340 times)

Offline MysteRy

மேங்களூரியன் நெய் சாதம்



பாசுமதி அரிசி – 2 கப்,
தண்ணீர் – 4 கப்,
நெய் – அரை கப்,
பட்டை, கிராம்பு – தலா 2,
பிரியாணி இலை – 2,
முந்திரி – 50 கிராம்,
திராட்சை – 50 கிராம்,
பச்சை மிளகாய் – 2,
நறுக்கிய வெங்காயம் – 2,
உப்பு – தேவைக்கேற்ப.
அரிசியைக் களைந்து, போதுமான தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். 4 டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரி, திராட்சையை தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். மீதி நெய்யை சூடாக்கவும். பட்டை, கிராம்பு, பிரியாணி இலை சேர்க்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வதக்கவும். ஊற வைத்த அரிசி, உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி, வேக விடவும். வெந்ததும், முந்திரி, திராட்சையால்  அலங்கரித்துப் பரிமாறவும்