Author Topic: ~ ஆடு கொத்துக்கறி கூட்டு ~  (Read 327 times)

Offline MysteRy

ஆடு கொத்துக்கறி கூட்டு

கொத்துக்கறி- அரைக் கிலோ
கடலைப்பருப்பு- அரை கப்
தக்காளி- இரண்டு
வெங்காயம்- 1
இஞ்சி- சிறிது
பூண்டு- 4 பற்கள்
மிளகாய்த்தூள்- 2 டேபிள் ஸ்பூன்
தனியாத்துள் -2 டேபிள் ஸ்பூன்
மஞ்சத்துள் – சிறிது
கரம் மசாலா- 1 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய்- 2
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி
பட்டை- 2 துண்டு
சோம்பு- 1 தேக்கரண்டி



செய்முறை :

1.தக்காளி வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும். இஞ்சி பூண்டை விழுதாக அரைத்து வைக்கவும்.
2.கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை சோம்பை போட்டு பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
3.கறி வதங்கியவுடன் இஞ்சி, பூண்டூ மஞ்சத்தூளைப் போட்டு வதக்கவும்.பின்பு கொத்துக்கறியை போட்டு வதக்கவும்.
4.பிறகு எல்லா பொடிகளையும் போட்டு உப்பையும் போட்டு நன்கு வதக்கி ஒரு கப் நீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
5.கறி நன்கு வெந்ததும் அதில் புளித்தண்ணீர் மற்றும் வேகவைத்த கடலைப்பருப்பைப் போட்டு அடுப்பை சிம்மில் ஒரு பத்து நிமிடம் வைத்திருந்து கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடவும்.
6.சாதம் மற்றும் சப்பாத்திக்கும் ஏற்ற சுவையான கொத்துக்கறி கூட்டு தயார்.