Author Topic: ~ நாட்டுக் கோழி வறுவல் ~  (Read 404 times)

Offline MysteRy

~ நாட்டுக் கோழி வறுவல் ~
« on: January 28, 2016, 08:55:10 PM »
நாட்டுக் கோழி வறுவ



தேவையான பொருட்கள்:

கோழி- அரை கிலோ
இஞ்சிபூண்டு விழுது- 2 டேபிள் ஸ்பூன்
மிளகாத்தூள்- சிறிது
தனியாத்தூ ள்- 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சத்தூள்- அரை டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – சிறிது
கறிவேப்பிலை- ஒரு கொத்து
எலுமிச்சைசாறு- 3 டேபிள் ஸ்பூன்
கேசரி கலர்- ஒரு சிட்டிகை
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய் – பொரிக்க தேவையானளவு.

செய்முறை :

1.கோழியை சுமாரான துண்டுகளாக வெட்டவும்.பின்பு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் அதில் சேர்த்து இரண்டு தேக்கரண்டி எண்ணெயையும் ஊற்றி நன்கு பிசிறி வைக்கவும்.
2.இக்கலவையை குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.பின்பு கடாயில் எண்ணெயை ஊற்றி விடவும்.
3.அதன் பிறகு ஊறிய கோழித்துண்டுகளை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும்