Author Topic: ~ அரிசி பருப்பு சாதம் ~  (Read 557 times)

Offline MysteRy

~ அரிசி பருப்பு சாதம் ~
« on: January 28, 2016, 08:30:27 PM »
அரிசி பருப்பு சாதம்



தேவையான பொருட்கள்:

அரிசி – 1 1/2 கப்
துவரம் பருப்பு – அரை கப்
வெங்காயம் – 1
தக்காளி – 2
ப.மிளகாய் – 2
கொத்தமல்லி இலை – சிறிதளவு

தாளிக்க :

கடுகு – அரை ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
பூண்டு – 4
காய்ந்த மிளகாய் – 2
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 1 ஸ்பூன்
நெய் – 1 ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை :

* அரிசி, பருப்பை நன்றாக கழுவி தண்ணீரில் ஊற வைக்கவும்.
* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
* பூண்டை ஒன்றும் பாதியாக தட்டி வைக்கவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய், நெய் ஊற்றி கடுகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்தபின் வெங்காயம், ப.மிளகாயை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
* அடுத்து மஞ்சள் தூள் போட்டு சிறிது வதக்கிய பின்னர் தக்காளியை சேர்க்கவும். 5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் ஊறவைத்த பருப்பு அரிசியை போட்டு 2 நிமிடம் கிளறிய பிறகு கொத்தமல்லி தழை, 4 கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
* 3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு குக்கர் மூடியை திறந்து கொத்தமல்லி தழையை தூவி பரிமாறவும்.
* இந்த அரிசி பருப்பு சாதத்தை அப்பளம், உருளைக்கிழங்கு பொரியலுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.