Author Topic: ~ அவரைக்காய் பொரியல் ~  (Read 317 times)

Offline MysteRy

~ அவரைக்காய் பொரியல் ~
« on: January 28, 2016, 08:22:03 PM »
அவரைக்காய் பொரியல்



தேவையான பொருட்கள்:

அவரைக்காய்- கால் கிலோ
தேங்காய்- அரைக் கப்
வேகவைத்த துவரம்பருப்பு- இரண்டு டேபிள் ஸ்பூன்
வெங்காயம்-ஒன்று
பூண்டு- 4 பற்கள்
மிளகாய்த்தூள்- ௧ டேபிள் ஸ்பூன்
தனியாத் தூள்- ௧ டேபிள் ஸ்பூன்
மஞ்சத்தூள் – 1 /2 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய்- ஒன்று
கடுகு-௧ டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை-ஒரு கொத்து
எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
உப்பு-தேவைக்கேற்ப

செய்முறை :

1.அவரைக்காயின் முனைகளைக் கிள்ளி அதன் நாரை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிவைக்கவும்.
2.வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
3.பூண்டை நசுக்கி வைக்கவும்,பச்சைமிளகாயை இரண்டாக கீறி வைக்கவும்.
4.கடாயில் எண் ணெய் காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலையைப் போட்டு பொரியவிடவும்.
5.பின்பு வெங்காயத்தை போட்டு வதக்கி அதில் பச்சைமிளகாய் பூண்டு மற்றும் அவரைக்காயைப் போட்டு கிளறவும்.
6.அதைத் தொடர்ந்து அனைத்து பொடிகளையும் உப்பையும் போட்டு நன்கு கிளறி விடவும்.
7.பின்பு அதில் ஒரு கையளவு நீரைத் தெளித்து மூடிப் போட்டு வேகவிடவும்.
8.காய் நன்கு வெந்ததும் தேங்காப்பூ மற்றும் துவரம்பருப்பைப் போட்டு கிளறி இறக்கவும்