Author Topic: ~ பட்டர் கேக் ~  (Read 435 times)

Offline MysteRy

~ பட்டர் கேக் ~
« on: January 25, 2016, 09:57:55 PM »
பட்டர் கேக்



தேவையான பொருட்கள்

கோதுமை மா – 500 கிராம்
சீனி – 500 கிராம்
மாஜரீன் – 500 கிராம்

முட்டை- 10
பேக்கிங் பவுடர் – 2 தே.க
வனிலா -1 மே.க
பனானா எசன்ஸ் – 3துளிகள்
பிளம்ஸ் – 50 கிராம்
கஜீ – 50 கிராம்

செய்முறை

சீனியை கிறைண்டரிலிட்டு அரைத்து கொள்க
மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 5 முறை அரித்து வைத்து கொள்க
மாஜரீனை பெரிய பாத்திரத்தில் போட்டு சீனியையும் சேர்த்து ஒரே பக்கமாக சீனி கரையும் வரை நன்றாக அடிக்க.
முட்டை களை வேறோர் பாத்திரத்தில் உடைத்துவிட்டு வனிலாவும் சேர்த்து நன்கு நுரை பொங்கும் வண்ணம் முடடை அடி கருவியால்(beater) அடித்து கொள்க.
பின்பு மாஜரீன் கலவையில் முட்டையை அடித்து வரும் நுரையை மட்டும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு முழுவதுமாக சேர்த்து நன்றாக அடித்து கொள்க.
பின்பு அடித்துவைத்துள்ள கலவையில் கோதுமை மாவை சிறிது சிறிதாக துாவி ஒரே பக்கமாக சேர்த்து கலந்து பனானா எசன்ஸையும் கஜீ பிளம்ஸையும் சேர்த்து கொள்க.
கேக் தட்டிற்கு ஒயில் பேப்பரை பரவி சிறிதளவு மாஜரீன் தடவிக்கொண்டு கேக் கலவையை ஊற்றி பேக் செய்து கொள்க.

பேக் செய்ததும் அனைவரும் விரும்பும் சுவையான பட்டர் கேக் தயார். நீங்கள் விரும்பிய வடிவத்தில் வெட்டி பரிமாறி கொள்ளலாம்.