Author Topic: ~ சத்தான மிளகு அடை ~  (Read 556 times)

Online MysteRy

~ சத்தான மிளகு அடை ~
« on: January 25, 2016, 08:52:26 PM »
சத்தான மிளகு அடை



தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 200 கிராம்
புழுங்கலரிசி – 200 கிராம்
துவரம் பருப்பு – 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி (பொடித்து கொள்ளவும்)
தேங்காய் பெரிய துண்டுகள் – 2 (சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்)
உப்பு – தேவைக்கு
நல்லெண்ணெய் – தேவைக்கு

செய்முறை:

* பருப்பு மற்றும் அரிசியை மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.
* அரைத்த மாவில் மிளகு தூள், தேங்காய், உப்பு போன்றவைகளை கலந்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசை கல்லில் ஊற்றி அடையாக செய்து சூடாக சாப்பிடவும்.
* இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
* குளிர்காலத்திற்கு ஏற்ற சத்துக்கள் இருக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. குழந்தைகளுக்கு நல்லது.