Author Topic: ~ காரம் பொரி ~  (Read 385 times)

Online MysteRy

~ காரம் பொரி ~
« on: January 19, 2016, 10:02:15 PM »
காரம் பொரி



பொரி – 1 கப்,
பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன்,
கேரட் துருவல் – 2 டீஸ்பூன்,
பீட்ரூட் துருவல் – 2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்),
காய்ந்த மிளகாய் 2,
கொத்தமல்லித்தழை – 1 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்,
பூண்டு – 5 பல்,
பெரிய வெங்காயம் – 5 (பொடியாக அரிந்தது),
தட்டுவடை – 4 (விருப்பப்பட்டால்) தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – சிறிது.

பூண்டுடன் காய்ந்த மிளகாய், சிறிது தண்ணீர், தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன் விட்டு நைசாக அரைக்கவும். ஓா் அகண்ட பாத்திரத்தில் பொரி, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை, கேரட் துருவல், பீட்ரூட் துருவல், சிறிது கரம் மசாலாத்தூள், அரைத்த விழுது, பொடியாக அரிந்த பெரிய வெங்காயம், உப்பு அனைத்தையும் போட்டு தேங்காய் எண்ணெய் சிறிது விட்டு கலக்கவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். அதில் விருப்பப்பட்டால் தட்டுவடையை ஒன்றிரண்டாக உடைத்தும் சேர்க்கலாம்.