Author Topic: ~ கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியை தடுக்க ~  (Read 387 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226755
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியை தடுக்க

கர்ப்பமாக இருக்கும் போது நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதில் ஒன்று தான் ஞாபக மறதி. அதிலும் இந்த மறதி முதல் மூன்று மாதங்களிலும், கடைசி மூன்று மாதங்களிலும் தான் ஏற்படும். அதற்காக எதற்கும் கவலைப்பட வேண்டாம். இது சாதாரணமாகவே கர்ப்பமாக இருக்கும் போது பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தான்.



கர்ப்பமாக இருக்கும் போது பெண்களின் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள், பெண்களின் மூளைச் செல்களை பாதிக்கும். இதனால் தான் அவர்களுக்கு மறதி ஏற்படும். குழந்தை பிறந்த பின்பு இந்த பிரச்சனை சரியாகிவிடும்.
கர்ப்பத்தின் போது மறதியை சரிசெய்ய வழிகள்…
கர்ப்பத்தினால் ஏற்படும் மறதியைத் தடுக்க நிறைய வழிகள் இருக்கிறது. உதாரணமாக, மறதியைத் தவிர்க்க, செய்ய வேண்டியதை எழுதி வைத்துக் கொள்ளலாம். இதனால் மறந்திருப்பதை ஞாபகப்படுத்திவிடலாம். வேண்டுமென்றால் மொபைலில் அல்லது மற்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருக்கும் ரிமைன்டரில் அலாரம் வைத்துவிட்டால், மறந்தது நினைவிற்கு வரும்.
பெரும்பாலும் கர்ப்பமாக இருக்கும் போது, வேலையை சற்று குறைத்துக் கொள்ளுங்கள். வீட்டு வேலையை வீட்டில் இருப்போருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் எதையும் மறந்துவிட முடியாது. ஏனெனில் வேலை அதிகமாக இருந்தால் தானே, அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்றெல்லாம் தோன்றும்.
முக்கியமான ஒன்று போதுமான அளவு நன்கு தூங்கி எழுந்திருக்க வேண்டும். அதிலும் குறைந்தது 8-9 மணிநேரத் தூக்கமாவது வேண்டும். இதனால் அதிக மனஅழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். ஆகவே மேற்கூறியவாறெல்லாம் கர்ப்பமாக இருக்கும் போது செய்து வாருங்கள். எதையும் மறக்காமல் இருக்கலாம்.