Author Topic: ~ உயர் ரத்த அழுத்தம் யாருக்கு வரும்? ~  (Read 325 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226773
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உயர் ரத்த அழுத்தம் யாருக்கு வரும்?



யாருக்கு வேண்டுமானாலும் இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு உண்டு. எனினும், சர்க்கரை நோயாளிகள், புகைபிடிப்பவர்கள், சிறுநீரகத் தொந்தரவு உள்ளவர்கள், இதய நோயாளிகள், உடல்பருமன் உடையவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கும், சிலருக்கு மரபுவழியாகவும் உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

கோபப்பட்டால், உயர் ரத்த அழுத்தம் வருமா?

கோபம் காரணமாக நேரடியாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான ஆதாரம் கிடையாது. ஆனால், மன அழுத்தம் காரணமாக உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு அதிகம்.

மனஉளைச்சல் மிகுந்த வேலை செய்பவர்கள், மன அழுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் எளிதில் வந்துவிடுகிறது. உயர் ரத்த அழுத்தப் பிரச்னைக்கு அறிகுறிகளே தெரியாது. பரிசோதனை செய்தால் மட்டுமே தெரியும்.

தலைசுற்றல், மயக்கம் போன்றவை உயர் ரத்த அழுத்தம் வந்த பின்னர் வரக்கூடிய அறிகுறிகள்