Author Topic: ~ கிச்சன் கைடு! ~  (Read 339 times)

Online MysteRy

~ கிச்சன் கைடு! ~
« on: January 11, 2016, 09:59:14 PM »
கிச்சன் கைடு!

மழை மற்றும் குளிர் காலங்களில் புளி பிசுபிசுப்பாகவோ அல்லது ஈரமாகவோ இருக்கும். இதைத் தடுக்க, தையல் இலைகளில் புளியை வைத்தால்,  இந்தப் பிரச்னை வராது.



உருளைக்கிழங்கை வெளியில் ஒரு வாரம் வைத்தாலே முளைவிட ஆரம்பிக்கும். இதைத் தடுக்க, உருளைக்கிழங்குகளின் நடுவே ஒரு ஆப்பிளை வைத்தால் உருளைக்கிழங்கு முளை விடாது.



தோசை மாவில் உளுந்து அதிகமாகிவிட்டால், கல்லில் தோசை ஒட்டிக்கொள்ளும். அந்த சமயங்களில், தோசை மாவில் சிறிது ரவையைக்  கலந்து தோசை சுட்டால், தோசைக் கல்லில் ஒட்டாது