Author Topic: ~ சுவையான காளான் பிரியாணி ~  (Read 331 times)

Offline MysteRy

சுவையான காளான் பிரியாணி



தேவையானவை :

பாஸ்மதி அரிசி – 3 கப்
காளான் – 2 கப்
சிப்பி காளான் – 1 கப்
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லிதழை – சிறிது
புதினா – 1 கப் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 2 மெலிதாக நறுக்கியது
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 3

அரைக்க தேவையானவை :

சின்ன வெங்காயம் – 4
வரமிளகாய் – 5
இஞ்சி – சிறிய துண்டுகள்
சோம்பு – 1 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 10 பல்
ஏலக்காய் – 2
கசகசா – 1 டீஸ்பூன்
மல்லிவிதை – 2 டேபிள்ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
(மேற்கண்ட கலவையை சிறிது தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ்சியில் அரைத்துக்கொள்ளவும்)
தாளிக்க தேவையானவை :
ஜாதிக்காய் – சிறிது (துறுவியது)
பிரியாணி இலை – சிறிது
மராட்டி மொக்கு
கடல்பாசி
ரோஜா மொக்க
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
முந்திரி – சிறிது
ஏலக்காய் – 1

செய்முறை :

1.ஒரு பாத்திரத்தில் அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.குக்கரில் நான்கு டேபிள்ஸ்பூன் எண்ணெய் மற்றும் இரண்டு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருள்களை சேர்க்கவும்.அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.பிறகு அரைத்த விழுதை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு என்னெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.அதனுடன் காளானை சேர்த்து வதக்கவும்.ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து சேர்த்து நன்கு கலக்கவும்.அதில் புதினா மற்றும் மல்லிதழை சேர்த்து கலக்கவும்.
2.அதனுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்து உப்பு காரம் பார்த்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடிவைத்து ஒரு விசில் சிறு தீயில் 5 நிமிடம் விட்டு இறக்கவும்.இப்பொழுது சுவையான கார்ன் புலாவ் தயார்.