Author Topic: ~ காய்கறி – கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி? ~  (Read 339 times)

Offline MysteRy

காய்கறி – கோதுமை ரவை உப்புமா செய்வது எப்படி?



காய்கறி கோதுமை ரவை உப்புமா தயாரிக்க தேவையான பொருட்கள் வருமாறு:-

கோதுமை ரவை-1 கப்,
வெங்காயம் – 2,
உருளைக்கிழங்கு, குடமிளகாய், கேரட், நறுக்கிய பீன்ஸ்-1 கப்,
பச்சை பட்டாணி-¼ கப்,
பச்சை மிளகாய்-3,
இஞ்சி- சிறிய துண்டு,
மஞ்சள் தூள்-½ தேக்கரண்டி,
கொத்தமல்லி இலை சிறிதளவு,
எலுமிச்சை பழச்சாறு-2 தேக்கரண்டி,
தண்ணீர்-3 கப்,
 உப்பு-தேவைக்கு ஏற்ப.
தாளிப்பதற்கு
கடுகு, சீரகம்,
உளுந்தம் பருப்பு,
பெருங்காயத் தூள்,
கடலைப்பருப்பு,
காய்ந்த மிளகாய்,
கறிவேப்பிலை ஆகியவை சிறிதளவு.

செய்முறை:-

• கோதுமை ரவையை சற்று இளம் சிவப்பாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
• வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• வாணலியை சூடாக்கி தாளிக்கும் பொருட்களை போட வேண்டும்.
• கடுகு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
• பிறகு பொடியாக நறுக்கிய காய்கறிகள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் வதக்கவும்.
• இதையடுத்து 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
• காய்கறிகள் நன்றாக வெந்ததும், அடுப்பை நிதானமாக எரிய விடவும்.
• வறுத்த கோதுமை ரவையை கொஞ்சம், கொஞ்சமாக தூவி கிளறவும். கட்டியாக ஆகிவிடாமல் பார்த்துக் கிளறவும்.
• தண்ணீரில் கோதுமை ரவை நன்றாக வெந்து கெட்டியானதும், இறக்கி விடவும்.
• கடைசியாக எலுமிச்சை சாற்றையும், நறுக்கிய கொத்தமல்லி இலையையும் காய்கறி உப்புமாவில் சேர்த்து நன்றாக கிளறி இறக்க வேண்டும்.