Author Topic: ~ சோயா பிரியாணி ~  (Read 316 times)

Offline MysteRy

~ சோயா பிரியாணி ~
« on: December 31, 2015, 07:25:35 PM »
சோயா பிரியாணி



பிரியாணிக்கு அடிமையானவர்கள் ஏராளம், அதுவும் காளான் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும்.
இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது காளான்.
இதுமட்டுமின்றி ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட காளானில் சமைத்து சாப்பிட்டால், சுவையாக இருப்பது மட்டுமின்றி உடலை ஆரோக்கியமாகவும் வைக்கும்.


தேவையான பொருட்கள்:

காளான்- அரை கிலோ.
சோயா சங்க்ஸ்- 1 கப்.
பாஸ்மதி அரிசி- 2 கப்.
பெரிய வெங்காயம், பூண்டு விழுது- 1, 2 டீஸ்பூன்.
தக்காளி- 2, இஞ்சி.
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா இலை- அரை கப்.
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்- 3.
எண்ணெய், நெய்- தலா 3 டேபிள்ஸ்பூன்.
தேங்காய்ப் பால்- அரை கப்.
மிளகாய் தூள், தனியா மற்றும் சீரகத் தூள்(சேர்த்து)- 2 டீஸ்பூன்,
பட்டை, கிராம்பு, ஏலக்காய்- 3- 5.

செய்முறை:

காளானை நன்கு சுத்தப்படுத்திய பிறகு, நீளத்துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பாசுமதி அரிசியையும், சோயா சங்க்ஸையும் தனித்தனியே ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கிய பின், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
இதில் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கிய பின், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
பின் இஞ்சி- பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கிய உடன், காளான் துண்டுகளை சேர்த்து பின் சோயாவை சேர்க்கவும்.
இந்த கலவையில் மஞ்சள், மிளகாய், தனியா, சீரகத் தூள், தயிர், தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து, கிரேவி பதம் வரும் வரை கிளறவும்.
இதில் தேவையான அளவு தண்ணீர் உற்றி அரிசியை சேர்த்து நன்கு வேக விடவும்.
வெந்தவுடன் நன்கு கிளறி விட்டு கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவையான காளான் சோயா பிரியாணி ரெடி!!!