Author Topic: ~ மினி மசாலா இட்லி ~  (Read 401 times)

Offline MysteRy

~ மினி மசாலா இட்லி ~
« on: December 28, 2015, 01:35:54 PM »
[bமினி மசாலா இட்லி[/b]



தேவையான பொருட்கள்:

இட்லிமாவு – 4 கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
கடுகு – அரை ஸ்பூன்
சோம்பு – அரை ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
மல்லித்தழை – சிறிது

செய்முறை:

மாவை சின்னச் சின்ன இட்லிகளாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பெரிய இட்லிகளாகச் செய்து அதை நான்காக வெட்டிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை மெல்லியதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, சோம்பு, உளுந்து, தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு அதில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விட்டு இட்லிகளைப் புரட்டி மல்லித்தழை தூவிப் பரிமாறவும்