Author Topic: ~ கிறிஸ்மஸ் ஸ்பெஷல்: சுவைமிக்க லவ் கேக் ~  (Read 421 times)

Offline MysteRy

கிறிஸ்மஸ் ஸ்பெஷல்: சுவைமிக்க லவ் கேக்



தேவையான பொருட்கள்:

ரவை – 500 கிராம்
சீனி – 1 கிலோ
பட்டர் – 250 கிராம்
முட்டை – 20 முட்டைகள் (10 முட்டைகளில் வெள்ளை கரு மட்டும்)
கஜு – 600கிராம்
ரோஸ் எசன்ஸ் – 2 தேக்கரண்டி
வெனிலா – 2 தேக்கரண்டி
பிளம்ஸ் – 200 கிராம்
ஆமன்ட் எசன்ஸ் – 2 தேக்கரண்டி
தேன் – ஒரு வயின் கிளாஸ் அளவு
ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
கருவப்பட்டை தூள் – 2 தேக்கரண்டி
கிராம்பு தூள் – சிறு துளி

செய்முறை:

ரவை மற்றும் பட்டரை ஒன்றாக கலக்கவும். முட்டை மஞ்சள் கருவுடன் சீனியை சேர்த்து ஒரு பெரிய பாத்திரத்தில் இட்டு நன்றாக அடிக்கவும். ரவை கலவையை இதனுடன் சேர்க்கவும். சிறுக நறுக்கிய கஜு, பிளம்ஸ்,மற்றும் நன்றாக அடித்த முட்டை வெள்ளை கரு என்பவற்றை சேர்க்கவும். கடைசியாக எல்லா எசன்ஸ்யும் தேனையும் இவைகளோடு கலந்து எண்ணை பசை கொண்ட தட்டிலிட்டு அவனிலே பொன்னிறமாகும் வரை பேக் செய்து எடுத்து பரிமாறவும்.