Author Topic: ~ கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பது நல்லதா? ~  (Read 341 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226796
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கர்ப்பிணிகள் காபி, டீ குடிப்பது நல்லதா?



கர்ப்பிணிகள் எந்த ஒரு உணவையோ அல்லது பானத்தையோ குடித்தாலும், அது நஞ்சுக்கொடி மூலம் கருவை அடையும். மேலும் நஞ்சுக்கொடி குழந்தைக்கு வேண்டிய சத்துக்கள் மற்றும் உணவுகளை வழங்குவதோடு, நச்சுமிக்க பொருட்கள் கருவை அடையாதவாறு தடையை ஏற்படுத்தி நல்ல பாதுகாப்பை வழங்கும்.
dswe
கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 2 கப் காபி குடிக்கலாம். அதுவும் பாலில் அளவாக காபித்தூள் சேர்த்து குடிக்க வேண்டும். இருப்பினும் கர்ப்ப காலத்தில் காபி குடிக்காமல் இருப்பதே பாதுகாப்பானது.
ஒரு நாளைக்கு கர்ப்பிணிப் பெண் 200 மிகி-க்கு அதிகமாக காபியை குடித்து வந்தால், கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி குழந்தை மிகவும் குறைவான எடையுடன் பிறக்கவும் வாய்ப்புள்ளது. எனவே ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க நினைத்தால், காபி குடிப்பதை 10 மாதத்திற்கு நிறுத்தலாம்.
கர்ப்பிணிகள் காபியைக் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் நஞ்சுக்கொடி வழியாக குழந்தையின் இரத்தத்தில் கலந்துவிடும். நஞ்சுக்கொடி இதனை தடுக்காது. எனவே காபி குடிப்பதைத் தவிர்ப்பதே நல்லது.
காபியுடன் ஒப்பிடுகையில் டீ குடிப்பது சிறந்தது. ஏனெனில் காபியை விட டீயில் காப்ஃபைன் அளவு குறைவாக உள்ளது.
கர்ப்பிணிப் பெண் டீ குடிப்பதாக இருந்தால், அளவாக டீ தூள் சேர்த்து தயாரிக்கப்பட்ட டீயைக் குடிப்பது நல்லது. அதுமட்டுமின்றி கர்ப்பிணிகள் க்ரீன் டீ குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.