Author Topic: ~ சத்துணவு டிஃபன் டைம்- 33 ரெசிப்பி! ~  (Read 2244 times)

Offline MysteRy

கேரட் ஜூஸ்



தேவையானவை:

கேரட் - 2, தேங்காய்ப்பால் - அரை கிளாஸ், தேன் - சுவைக்கு ஏற்ப.

செய்முறை:

கேரட்டின் மேல் தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கி, நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்ட வேண்டும். அதில், தேங்காய்ப்பாலைக் கலந்து, தேன் சேர்த்துக் குடிக்கலாம்.

பலன்கள்:

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தினமும் சாப்பிடலாம். சர்க்கரை நோயாளிகள் அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.  பார்வைத்திறனுக்கு நல்லது. கேரட்டில்  வைட்டமின் சி இருப்பதால் சருமம் அழகாகும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு நல்லது. இளமையைத் தக்கவைக்கும். தேங்காய்ப் பால் வயிற்றுப்புண், வாய்ப் புண்களை ஆற்றும்.

Offline MysteRy

ஹாட் சாக்லேட்



தேவையானவை:

பால் - ஒரு கப், கோகோ பவுடர் - 2 டீஸ்பூன், ஹாட் சாக்லேட் பவுடர் - 1 டீஸ்பூன், நாட்டு சர்க்கரை - 2 டீஸ்பூன்.

செய்முறை:

நன்கு காய்ச்சிய பாலில் கோகோ பவுடர் மற்றும் ஹாட் சாக்லேட் பவுடர் (சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்) கலந்து, நாட்டு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.

பலன்கள்:

கோகோவில் பாலிபினால் அதிக அளவில் உள்ளது.  இது புற்றுநோயை எதிர்க்கக்கூடியது. அளவாகச் சாப்பிட்டால் சருமம், இதயத்துக்கு நல்லது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், ஃபிளேவனாய்டு கசப்புச் சுவையைத் தரும். எனினும், இவை சத்துக்கள் நிறைந்தவை. நாட்டுச்சர்க்கரை, பாலுடன் சேர்வதால் கசப்பு நீங்கி, சுவையாக இருக்கும். வாரம் ஓரிருமுறை குடித்து வருவது நல்லது.

Offline MysteRy

அன்னாசி - தேங்காய்ப்பால் ஜூஸ்



தேவையானவை:

அன்னாசிப்பழம் - 6 துண்டுகள், தேங்காய்ப்பால் - அரை கிளாஸ், தேன் - சுவைக்கு ஏற்ப.

செய்முறை:

அன்னாசியைச் சிறு சிறு துண்டுகளாக்கி, சிறிது நீர் சேர்த்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டி, இதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

பலன்கள்:

பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகளுக்கு இதைக் குடிக்கக் கொடுக்கலாம். சத்துக்கள் நிரம்பியது. வயிறும் நிறையும். தொண்டை வலி, கரகரப்பு நீங்கும். பெரியவர்கள் குடித்துவர தொப்பை கரையும்.

Offline MysteRy

ஈஷா ஸ்பெஷல் சுக்கு காபி



தேவையானவை:

ஈஷா ஸ்பெஷல் சுக்கு காபி - 1 டீஸ்பூன், தண்ணீர் - 1 கப், கருப்பட்டி - தேவைக்கு ஏற்ப.

செய்முறை:

தண்ணீரில் சுக்கு காபி பவுடரைப் போட்டு, தேவையான கருப்பட்டியைச் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டிக் குடிக்கலாம்.

பலன்கள்:

சுக்கு காபி, பசியைத் தூண்டும். அளவாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையும். உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறிக்கும்.  சளிப் பிரச்னைகளை நீக்கி, உடலை உற்சாகம் அடையச்செய்யும். பால் சேர்க்காமல் கருப்பட்டி சேர்த்து அருந்துவதால், உடல் வலுவாகும். மழைக் காலத்துக்கு ஏற்றது.