Author Topic: ~ ஜீஞ்சர் சிக்கன் கிரேவி ~  (Read 340 times)

Online MysteRy

ஜீஞ்சர் சிக்கன் கிரேவி



கோழி -அரை கிலோ
எண்ணெய்-தேவையான அளவு
மிளகாய்த்தூள்-2ஸ்பூன்
இஞ்சி-2 துண்டு
பூண்டு -6 பல்
மஞ்சள் தூள்-1ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
கறிவேப்பிலை- சிறிதளவு
பட்டை-1
லவங்கம்-சிறிதளவு
கிராம்பு-2
இலை-2

சிக்கனை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து பின்னர் தண்ணீர் நீக்கி பிழிந்து வைத்துக் கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை தோல் நீக்கி விழுதுகளாக அரைத்து கொள்ளவேண்டும்.

பின்னர் பட்டை இலவங்கம் இலை கிராம்பு இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவேண்டும். மஞ்சள் தூள் உப்பு மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு விழுதுகளை சேர்த்து அதனுடன் சிக்கனை போட்டு நன்கு கிளறி விடவும்.

அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு குக்கரில் குக்கரில் இரண்டு விசில் வருவரை மூடி வைக்கவும்.பின் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வரும்வரை வதக்கவும்.. அதில் இலைகளை தூவி பறிமாறலாம்