Author Topic: ~ தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ~  (Read 345 times)

Offline MysteRy

தேங்காய் பூர்ண கொழுக்கட்டை



தேவையான பொருட்கள்:

அரிசி மாவு – 1 கப் உப்பு – 1/2 டீஸ்பூன் தண்ணீர் – தேவையான அளவு உள்ளே வைப்பதற்கு… தேங்காய் – 1/2 கப் (துருவியது) வெல்லம் – 1/4 கப் ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை செய்முறை: முதலில் வெல்லத்தை தட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்து தண்ணீர் சற்று கெட்டியாகும் வரை சூடேற்றி இறக்கி, வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து தேங்காயில் உள்ள நீர் முற்றிலும் வற்றும் வரை வதக்க வேண்டும். பின்பு வடிகட்டி வைத்துள்ள

வெல்லப்பாகை மீண்டும் அடுப்பில் வைத்து, தேன் போன்று கெட்டியாகும் நிலையில் வறுத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய் பொடி தூவி 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட்டு இறக்க வேண்டும். பிறகு அந்த தேங்காய் கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை சேர்த்து, அத்துடன் உப்பு சேர்த்து கரண்டியால் கிளறி, சுடுநீர் மெதுவாக ஊற்றிக் கொண்டே கரண்டியால் கிளறி, வெதுவெதுப்பாகும் வரை 2-3 நிமிடம் குளிர வைக்க வேண்டும். அடுத்து கைகளால் மாவை நன்கு மென்மையாக பிசைந்து சிறிது நேரம் தனியாக வைத்துக் கொள்ளவும். பின் கைகளில் தேங்காய் எண்ணெயை தடவிக் கொண்டு, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிது எடுத்து உருண்டையாக்கி, தட்டையாக தட்டி, அதன் நடுவே தேங்காய் உருண்டையை வைத்து, கூம்பு வடிவில் அல்லது பிடித்த வடிவில் கொழுக்கட்டை செய்து கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்ய வேண்டும். இறுதியில் இட்லி பாத்திரத்தில், அந்த கொழுக்கட்டைகளை வைத்து, வேக வைத்து இறக்கினால், தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ரெடி