Author Topic: ~ மஸ்ரூம் முட்டை ஆம்லெட் ~  (Read 394 times)

Offline MysteRy

மஸ்ரூம் முட்டை ஆம்லெட்



தேவையான பொருட்கள்:

காளான் – 100 கிராம்
முட்டை – 4
வெங்காயம் – 50 கிராம்
பச்சை மிளகாய் – 3
மிளகுப்பொடி – 1 தேக்கரண்டி
உப்பு, மஞ்சள் பொடி – தேவைக்கேற்ப

செய்முறை:

• முட்டையின் வெள்ளை கருவை மட்டும் எடுத்து நன்கு அடித்துக் கலக்கிக் கொள்ள வேண்டும்.
• காளான், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• நறுக்கியவைகளை அடித்து வைத்துள்ள முட்டையுடன் சேர்த்து மிளகுப் பொடி, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.
• அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் அதில் சிறிது எண்ணெய் தடவிய பின் முட்டை கலவையையை ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து விட வேண்டும்.
• இப்போது சுவையான சத்தான காளான் முட்டை ஆம்லெட் ரெடி.