Author Topic: ~ க்ரிஸ்பி சிக்கன் ~  (Read 418 times)

Offline MysteRy

~ க்ரிஸ்பி சிக்கன் ~
« on: November 29, 2015, 05:25:24 PM »
க்ரிஸ்பி சிக்கன்



தேவையான பொருள்கள்

சதை நிறைந்த சிக்கன் – 14kg

மைதா மாவு – 1 கப்

முட்டை – 1 அல்லது 2

மஞ்சள் தூள் – 1/4 tsp

மிளகுத் தூள் – 1/2 tsp

சீரகத் தூள் – 1/4 tsp

மல்லித் தூள் – 1/2 tsp

மிளகாய் தூள் – 1/4 tsp

உப்பு – தேவையான அளவு

எண்ணெய்

செய்முறை

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். சிக்கனை எலும்பில்லாமல் மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

பிறகு சிக்கன் துண்டுகளை முட்டையில் தோய்த்தெடுத்து, கலந்து வைத்துள்ள மைதா மாவில் நன்கு பிரட்டவும்.

வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மைதா மாவில் பிரட்டிய சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பொரிக்கவும்.

நன்கு பொரிந்து கிரிஸ்பியாக வந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.

டேஸ்டி மற்றும் க்ரிஸ்பி சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் ரெடி. குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.