Author Topic: ~ திரெளபதியின் திருமணம் ~  (Read 369 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218524
  • Total likes: 23149
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
திரெளபதியின் திருமணம்



ஒகச் சக்கர நகரத்தில் பாண்டவர்கள் மற்றும் குந்தி தேவியும் பிராமண வடிவிலே தங்கியிருந்து அங்கு அட்டகாசம் செய்து வந்த பகாசூரனை வதம் செய்கின்றார்கள் இதனால் அந்நகர மக்களின் அபிமானத்திற்கு ஆளாகின்றனர்.இருந்தாலும் அவர்கள் பிச்சை எடுத்து காலத்தினைக் கழித்து வந்தார்கள், சும்மா இருக்கும் நேரங்களில் அங்கிருந்த ஏனைய பிராமணர்களோடு வேதங்களினையும் தர்மசாஸ்திரங்களினையும் கற்று வருதலில் ஈடுபாடு கொண்டார்கள்.இதனால் அவர்கள் மிகவும் மனவலிமையைப் பெற்றவர்களாக மாறினார்.அச்சமயத்தில் அந்த நகரத்திர்கு செய்தியொன்று வந்தது.பாஞ்சால மன்னன் துருபதன் தனது ஒரே மகளான திரெளபதிக்கு சுயம்வர ஏற்பாடுகள் செய்துள்ளான் என்பதே அச்செய்தியாகும்.இந்தச் சுயம்வரம் பாஞ்சால நாட்டின் தலைநகரமான காம்பிலியாவில் நடப்பதாக செய்தி அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சுயம்வரம் பாஞ்சால தேசத்து ராஜாக்களும் இதில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்த சுயம் வரத்தினைக் காண அனைத்து பிராமணர் வைசியர். சூத்திரர் என பலரும் போகின்றார்கள் என்கிற செய்தியும் பாண்டவர்களுக்குக் கிடைக்கின்றது.இந்த சுயம்வரமானது வில் வித்தையில் சிறந்து விளங்கக்கூடிய அர்ச்சுனனுக்காகவே செய்யப்பட்டுள்ளது எனவும், ஒரு வேளை தீ விபத்தில் இருந்து பாண்டவர்கள் தப்பியிருந்தால், திரெளபதியை மணக்க அவர்கள் சுயம்வரத்தில் கலந்து கொள்ளலாம் என்கிற செய்தியும் பரவலாகப் பரவியிருநத்து.இதனால் பாண்டவர்களும் தமது தாய் குந்திதேவியோடு காம்பிலியா நகரம் செல்ல முனைந்தனர்.அங்கு ஒரு குயவனின் வீட்டில் குந்திதேவியை தங்க வைத்துவிட்டு பாண்டவர்கள் சுயம்வரத்தினைக் காண்பதற்காகத் தாம் மட்டும் நகரத்தின் உள்ளே சென்றார்கள்.

சுயம்வரத்தில் கலந்து கொள்வதற்காக எல்லா தேசத்து ராஜகுமாரர்களும் வந்து இறங்கியிருந்தார்கள்.துரியோதனன், கர்ணன். சல்லியன், பலராமன், கிருஷ்ணன், ஜராசந்தன் போன்றோரும் அங்கே வந்திருந்தனர். இவர்கள் அங்கே மாளிகையில் சுயம்வர நாளினை எதிரிபாத்துத் தங்கியிருந்தனர்.சுயம்வர நாள் ஏக தடபுடலாக வந்தது. ராஜகுமாரர்கள் ஆடம்பரமாக அமைக்கப்பட்டு இருந்த ஆசனத்தில் அமர்ந்து இருந்தார்கள். பாண்டவர்கள் பிராமணக் கோலத்தில் இருந்ததால் பிராமணர்கள் தங்கியிருந்த இடத்திலே அமர்ந்து இருந்தனர். அவர்கள் ஒன்றாக உட்காராமல் தனித்தனியாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தனர்.இதுதான் சுயம்வரத்துக்கான போட்டி இங்கே ஒரு வில் வைக்கப்பட்டு உள்ளது. கூடவே ஐந்து அம்புகளும் வைக்கப்பட்டு உள்ளன. மேலே ஒரு கம்பத்தில் துவாரத்தோடு கூடிய சக்கரம் ஒன்று சுழன்று கொண்டுள்ளது. அந்தச் சக்கரத்திற்கும் மேலே மீன் வடிவில் இலக்கியொன்று பொருத்தப்பட்டு உள்ளது. வில்லெடுத்து அம்பு பூட்டி துவாரத்தின் வழியாக அந்த இலக்கியை வீழ்த்துபவர் யாரோ? அவரே எனது சகோதரிக்குரிய மணவாளன் ஆவார். என்று கூறுகின்றான்.

அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து முயற்சியில் தோற்றுப் போகின்றார்கள். இதனால் வருத்தப்பட்ட திருஷ்டத்யும்னன் இப்போது இங்கு வந்த ராஜகுமாரர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் தோற்றுப் போய் விட்டார்கள், எனவே இப்போட்டி அனைவருக்கும் பொதுவானப் போட்டியாக அறிவிக்கப்படுகின்றது. பிராமணர், க்ஷத்தியர் யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியிலே கலந்துக் கொள்ளலாம். வெற்றி பெறுபவர் யாராக இருந்தாலும் எனது சகோதரி திரெளபதியை மணந்து சீர் பெறலாம் என அறிவிப்பினை விடுவிக்கின்றான்.அப்போது பிராமணர் வேடத்தில் இருந்த அர்ச்சுனன் பிராம்மணர் கூட்டத்தினை விட்டு போட்டியிலே கலந்து கொள்ள வெளியே வந்தான். பிராமணர்கள் இவன் நிச்சயம் அவமானப்படப் போகின்றான். இதிலே கலந்து கொள்ளும் திறமையும் ஆற்றலும் பிராமணர்களுக்கு சிறிதும் கிடையாதே என்று அங்கலாய்த்தனர்.ஆனால் பிராமணர் வேடத்தில் இருப்பது அர்ச்சுனன் என்பது அவர்களுக்குத் தெரியாது.அர்ச்சுனன் நாராயணனை மனத்திலே நிறுத்திக் கொண்டு ஒரே அம்பில் இலக்கியை கீழே வீழ்த்தினான். திரெளபதி தனது கையிலுள்ள சுயம்வர மாலையை அவனுக்கு அணிவித்து மணாளனாக ஏற்றுக் கொண்டாள். அப்போது அங்கு சுற்றியிருந்த ராஜகுமாரர்கள் குழப்பம் விளைவித்தனர்.ஆனால் கண்ணனுக்கு மட்டும் போட்டியில் ஜெயித்த பிராமணன் அர்ச்சுனன் தான் என்பதும் புலப்பட்டு விட்டது.

இதனால் ராஜகுமாரர்கள் மேற்கொண்ட கலவரத்தினை ஒடுக்கி அவர்களைப் போகச் செய்தான் கண்ணன்.திரெளபதியை அழைத்துக் கொண்டு தனது சகோதரர்களோடு குந்திதேவி தங்கியிருந்த குயவனின் வீட்டிற்குச் சென்றான் அர்ச்சுனன்.அம்மா உனக்கு ஒரு புதுமையான பிச்சை கொண்டு வந்துள்ளோம் என அனைவரும் ஒரே குரலில் ஒலிக்கின்றனர்.குந்திதேவிக்கு அவர்கள் திரெளபதியைக் கொண்டு வந்தது தெரியாது. உடனே அவள் எதனைக் கொண்டு வந்தாலும் சரி அதனை நீங்கள் ஐந்து பேரும் பங்கிட்டு மகிழுங்கள் என ஆணையிடுகின்றாள்.ஆனால் அவர்கள் கொண்டு வந்தது திரெளபதியை என்கிற கன்னிகை என்பதறிந்து மனம் குழம்புகின்றாள்.இருந்தும் தாயின் சொல்லையே வேத வாக்காகக் கருதி ஐவரும் திரெளபதியை மனம் புரிகின்றனர். பாண்டவர்கல் உயிருடன் இருக்கும் செய்தி இந்த சுயம்வரம் மூலமாக பாஞ்சால மன்னன் துருபதனுக்கும் தெரிய வருகின்றது.இதனால் அவன் தனது மகள் திரெளபதியின் சுயம்வரம் நினைத்து மனம் மகிழ்கின்றான்.பாண்டவர்கலும் உண்மையை ஒப்புக் கொண்டு பிராமண வேடத்தினைக் கலைக்கின்றார்கள்.
முறையாகத் திருமண ஏற்பாடுகளை செய்தான் துருவதன்.

திரெளபதி ஐந்து பேர்களை மணந்துகொண்டது பாரத கலாச்சாரத்திற்கு முரண்பாடானது. திரெளபதிக்கு ஏன் இந்த ஐந்து கணவர்கள் என்ற கேள்வி எழும்போது. வியாசப்பெருமான் அதற்கு திரெளபதியின் முற்பிறவியே காரணம் என்று கூறுகிறார் அதாவது அவள் முன்னொரு பிறவியில் தனக்கு நற்குணங்களை கொண்ட கணவன் வேண்டும் என்று ஈசனை நோக்கி கடும் தவம் புரிந்தாளாம் அப்போது ஈசன் அவளுக்கு காட்சி அளிக்க, திரெளபதி ஈசனிடம் எனக்கு நற்குணங்களை படைத்த கணவன் வேண்டும் என்றாள். ஈசன் உடனே வரத்தை அளிக்காமல் இருந்தாராம் அப்போது திரெளபதி மீண்டும் எனக்கு நற்குணங்களை படைத்த கணவன் வேண்டும் என்று கேட்டாளாம் இவ்வாறு ஐந்து முறை கேட்க்க ஈசன் உன்னுடைய அடுத்த பிறவியில் நற்குணங்களை படைத்த ஐந்து கணவர்கள் பெருவாய் என்று வரத்தை அளித்துவிட்டாராம், திரெளபதியோ நான் உங்களிடம் ஒரு கணவனைதானே கேட்டேன் நீங்கள் எனக்கு ஐந்து கணவர்களை பெருவாய் என்று கூறிவிட்டீர்களே என்று வினவ ஈசன் நீ என்னிடத்தில் ஐந்து முறை கேட்டதால் இவ்வாறு அருளினேன் என்று கூறி மறைந்து விட்டாராம்.