Author Topic: ~ எல்லா உணவுக்கும் பக்கா ஜோடி... 30 வகை பச்சடி! ~  (Read 2425 times)

Online MysteRy

புதினா - வெங்காய தயிர்பச்சடி



தேவையானவை:

புளிக்காத தயிர் - 1 கப், பெரிய வெங்காயம் - 3, புதினா - 1 கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவைக்கு.

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து பிசறி அழுத்தி வையுங்கள். புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்குங்கள். பரிமாறுவதற்கு சற்று முன் வெங்காய கலவையை பிழிந்து எடுத்து தயிரில் சேர்த்து, அத்துடன் புதினா, உப்பு சேர்த்து கலந்து பறிமாறுங்கள். பிரமாதமான சுவை தரும் இந்த தயிர்பச்சடி.