Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
click here enter chat Room
www.friendstamilchat.net
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கல்லீரலை காக்கும் கறிவேப்பிலை..! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கல்லீரலை காக்கும் கறிவேப்பிலை..! ~ (Read 425 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226802
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கல்லீரலை காக்கும் கறிவேப்பிலை..! ~
«
on:
October 14, 2015, 09:19:25 PM »
கல்லீரலை காக்கும் கறிவேப்பிலை..!
உணவில் நறுமணத்துக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை, நாம் தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும், காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால், ஏராளமான நன்மைகள் கிடக்கின்றன. கறிவேப்பிலையில் வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘பி’,வைட்டமின் ‘பி2, வைட்டமின் ‘சி’, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. கறிவேப்பிலை,முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும், காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பல உள்ளன.
அதிலும் இதனை தொடர்ந்து, 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால், கொழுப்புகரையும். காலையில் வெறும் வயிற்றில்,15கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். ரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம்பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்தசோகை நீங்கும்.
சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதயநோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.
நீண்ட நாட்கள் செரிமான பிரச்னையை சந்தித்து வருபவர்கள், அதிகாலையில் வெறும் வயிற்றில்,15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். அதேபோல் இதனை தினமும் சிறிது உட்கொண்டு வர, முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருக்கும்.
ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியில் தேன் கலந்து, தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியுள்ள சளி முறிந்து வெளியேறி விடும். கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ‘ஏ’மற்றும்‘சி’கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும். இனி கறிவேப்பிலைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஆரோக்கிமான வாழ்க்கையை தொடங்குங்கள்…
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கல்லீரலை காக்கும் கறிவேப்பிலை..! ~