Author Topic: நினைவெல்லாம் நீயே !!  (Read 690 times)

Offline SweeTie

நினைவெல்லாம் நீயே !!
« on: September 09, 2015, 11:48:43 PM »
கொட்டும் மழையிலே நீ குடைப்பிடிக்க
நான் உன் கை கோர்த்து நடந்துவர
தூவானம் என்மேல் தெறிக்காமல்
உன் கைக்குட்டையால்  என் முகத்தைமூடி
உன்மீது சாய்த்துக்கொண்டு
நீ நனைந்தாயே -  என்ன சொல்வேன்
உன் அறிவென்பேனா இல்லை என்மேல்
கொண்ட அளவில்லா காதல் என்பேனா??

உன் படிப்பறையில் நீ தனித்திருந்த வேளைதனில்
மெதுவாய் நடந்துவந்து உன்
கண்களை கட்டிக்கொண்டபோது  என்
கொலுசு சத்தம் உனக்கு கேட்காமப்போனதென்று
புத்தம் புதிதாக மணி சேர்த்து கொலுசு செய்து
என் கால்களில் அணிவித்து மனம் குளிர்ந்தாயே
எப்படி மறப்பேன் உன் அடாவடியை ??

நீ அறிவாளி என்று நான் பிரமித்த வேளைகளில்
ஓரக் கண்ணால் ஓர் ஆயிரம் மொழிகள் பேசி
என் கூடவே நீ இருந்தால்  இந்த பிரபஞ்சத்தையே
வென்றுவிடுவேன் என இறுமாப்புடன் பேசி
என்னைக் கிறங்க வைத்தாயே
அதையும்தான் மறப்பேனா ??
« Last Edit: October 18, 2015, 05:43:16 AM by SweeTie »

Offline gab

Re: நினைவெல்லாம் நீயே !!
« Reply #1 on: September 10, 2015, 02:02:40 AM »
கவிதைக்கு ஒரு லைக் . காதல் கவிதைகளில் உங்கள் திறமை மென்மேலும் வளர்கின்ற ரகசியம் என்னவோ ? வாழ்த்துக்கள் .

Offline CybeR

Re: நினைவெல்லாம் நீயே !!
« Reply #2 on: September 11, 2015, 08:48:54 AM »
Jii Unga Poem Semma Semma Tharu Maaru Thakali Sooru...Apdi Eh Touching Ji..Best Wishes To U ...

Offline JoKe GuY

Re: நினைவெல்லாம் நீயே !!
« Reply #3 on: September 13, 2015, 01:01:51 PM »


உங்களின் கவிதை மழை காதலை கண் முன்னே கொண்டு வருகிறது .வாழ்த்துக்கள் மலரட்டும் உங்களின் கவிதை பூக்கள்



உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline SweeTie

Re: நினைவெல்லாம் நீயே !!
« Reply #4 on: September 13, 2015, 05:04:14 PM »
நன்றி நண்பர்கள்  Gab .  Cuber .   Joke Giuy .   எங்கள் உற்சாகம்
உங்கள்  வாழ்த்துகளில் ......

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: நினைவெல்லாம் நீயே !!
« Reply #5 on: October 16, 2015, 02:23:22 AM »
jo superb arumaiyana varigal ungal kavithaila enga ellaraiyum kiranga vachittingale ungal kavithai thodara vazhthukkal....

Offline SweeTie

Re: நினைவெல்லாம் நீயே !!
« Reply #6 on: October 16, 2015, 08:28:56 AM »

Ram late  ah poddalum nallave podrukenga.   romba nantri

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: நினைவெல்லாம் நீயே !!
« Reply #7 on: October 17, 2015, 05:40:20 PM »
நல்லா தான் எழுதி இருக்கீங்க , எனினும்
வெறும் உரைநடை தவிர்த்து கவி நடையும் புகுத்தி
ஆங்காங்கே உள்ள எழுத்துப்பிழைகளையும்
பதிக்கும் முன் படித்துப்பார்த்து பின் பதிக்கவும் !!

வாழ்த்துக்கள் !!

AnonYmous

  • Guest
Re: நினைவெல்லாம் நீயே !!
« Reply #8 on: October 19, 2015, 01:27:55 AM »
kadhal vazhintodum vaarthaigal, ungal kadhal kavidhai ennai sinthika vaithathu enn pasumaiyana ninaivugalai, ungal kavithaigal thodara enn vazhthukal sweetie