Author Topic: ~ நட்ஸ் குக்கீஸ் ~  (Read 499 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226929
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ நட்ஸ் குக்கீஸ் ~
« on: October 06, 2015, 05:10:01 PM »
நட்ஸ் குக்கீஸ் 



மைதா (சலித்தது) - 500 கிராம்,
டால்டா அல்லது வெண்ணெய் - 250 கிராம்,
சர்க்கரை பவுடர் - 250 கிராம்,
ஏலக்காய் - 2,
உப்பு - 1 சிட்டிகை,
பொடித்த நட்ஸ் - 1/2 கப்,
ஆப்ப சோடா (சலித்தது) - 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

சர்க்கரையை டால்டா அல்லது வெண்ணெய் சேர்த்து நன்றாக தேய்த்து அடிக்கவும். மிருதுவாக வரும் வரை கைவிடாமல் அடிக்கவும். இத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக சலித்த ஆப்ப சோடா, மைதா, ஏலக்காய் சேர்த்து கலக்கவும். உதிரும் பக்குவத்தில் உப்பு சேர்க்கவும். மீண்டும் கலந்து, நட்ஸை சிறிது மைதா மாவில் கலந்து இந்தக் கலவையுடன் சேர்த்து, தேவையான வடிவில் உருட்டவும். உருட்டியவற்றை குக்கீஸ் கப்புகளில் நிரப்பி அதற்கு மேல் சிறிது பொடித்த நட்ஸை தூவி அவனில் (150 முதல் 175குசி) 15 முதல் 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும். டிரேயில் இடம் விட்டு அடுக்கியும் பேக் செய்யலாம். இது சூடாக இருக்கும் போது மெது மெதுவென்று இருக்கும். ஆற ஆற, மொறுமொறுவென ஆகிவிடும்.