Author Topic: ~ வகை வகையாய்... கத்திரிக்காய்ச் சமையல்! ~  (Read 1136 times)

Offline MysteRy

வகை வகையாய்... கத்திரிக்காய்ச் சமையல்!

வாங்கி பாத் 
பஹாரா பைங்கன் 
பைங்கன் பர்த்தா
பைங்கன் முஸ்ஸலாம் 
கத்திரிக்காய் பெப்பர் அண்ட் சால்ட்
கத்திரிக்காய் ரோஸ்ட் 
பிரின்ஜால் ஃப்ரை 
வழுதலங்காய் கறி
சிறு கத்திரிக்காய் தக்காளித் தொக்கு
சிலோன் பிரின்ஜால் மசாலா 
கத்திரிக்காய் குழி மண்டி



விதவிதமான இந்தக் கத்திரிக்காய்ச் சமையலைச் செய்து அசத்துங்கள்... ‘பிரின்ஜால் ரெசிப்பி க்யூன்’ பட்டம் தானாகத் தேடி வரும்!

* இந்த ரெசிப்பிக்களை வழங்கியவர் செஃப் பழனிமுருகன்

Offline MysteRy

வாங்கி பாத்



தேவையானவை:

பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் - 5
பொடியாக நறுக்கிய பெரிய
வெங்காயம் - 1
மிதமாக வேகவைத்த பச்சரிசி சாதம் - 1 கப்
உப்பு  - தேவையான அளவு.
வாங்கிபாத் பொடி செய்ய:
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுந்து - அரை டேபிள்ஸ்பூன்
மல்லி (தனியா) - 1 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
ஏலக்காய் - 1
பட்டை - 1
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

பொடி செய்யத் தேவையானவற்றை எல்லாம் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, வறுத்து ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். தாளிக்கக் கொடுத்த பொருட்களைத் தாளித்து, இதில் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கத்திரிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் தேவையான அளவு உப்பு மற்றும் வாங்கி பாத் பொடி சேர்த்துக் கிளறி, பச்சரிசி சாதம் சேர்த்து இரண்டு நிமிடம் சிம்மில் வைத்து இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

பஹாரா பைங்கன்



தேவையானவை:

கத்திரிக்காய் - 4
பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
பச்சைமிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்.

அரைக்க:

நிலக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
மல்லி (தனியா) - அரை டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பட்டை - 1 டீஸ்பூன்
கிராம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
ஏலக்காய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை, ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வறுத்து ஆறியதும், மிக்ஸியில் பொடி செய்து வைக்கவும். கத்திரிக்காயை நான்காக வெட்டி, ஒரு கப் தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் போடவும் (இது கத்திரிக்காயை நிறம் மாறாமல் வைக்க உதவும்). வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய்  சேர்த்து நன்கு வதக்கி, அதனுடன் கத்திரிக்காயைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். கத்திரிக்காய் நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, அரைத்து  வைத்துள்ள மசாலாத்தூள் சேர்த்து, 10 நிமிடம் வேக வைத்து இறக்கி கொத்தமல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

Offline MysteRy

பைங்கன் பர்த்தா



தேவையானவை:

கத்திரிக்காய் - 2
பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
பொடியாக நறுக்கிய பூண்டு - 5 பல்
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிதளவு
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு

செய்முறை:

கத்திரிக்காயைக் கழுவி சிறிது நேரம் தண்ணீர் வடிய விடவும். வடிந்ததும் அதன் தோல் மீது சிறிது எண்ணெய் தடவி, அடுப்பை சிம்மில் வைத்து, இடுக்கியின் உதவியுடன் கத்திரிக்காயைச் சுட்டுக் கொள்ளவும். ஆறியதும் கத்திரிக்காயின் தோலை நீக்கிப் பிசிறி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து நன்கு கலவை ஆகும் வரை வதக்கி, கத்திரிக்காயைச் சேர்த்து உப்பு மற்றும் மிளகாய்த்தூள் கலந்து 5 நிமிடம் வேகவைத்து, கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.

Offline MysteRy

பைங்கன் முஸ்ஸலாம்



தேவையானவை:

சிறிய கத்திரிக்காய் - 4
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -
1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - 3
தக்காளி பியூரி - 5 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்திரிக்காயை நான்காக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கத்திரிக்காயைப் பொரித்தெடுத்து ஆறவிடவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி உருகியதும் சீரகம் சேர்த்துப் பொரிய விடவும். இதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் தக்காளி சேர்த்து வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், கொத்தமல்லித்தழை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கி, எண்ணெய் பிரிந்து வந்ததும் உப்பு மற்றும் தக்காளி பியூரி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு பொரித்து வைத்துள்ள கத்திரிக்காயைச் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

கத்திரிக்காய் பெப்பர் அண்ட் சால்ட்



தேவையானவை:

கத்திரிக்காய் - 5
பொடியாக நறுக்கிய இஞ்சி  -
1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு -
1 டேபிள்ஸ்பூன்
கார்ன்ஃபிளார் - 2 டீஸ்பூன்
மைதா மாவு - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரியவெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் - 1.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கத்திரிக்காயை விரும்பும் வடிவில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, கார்ன் ஃபிளார் ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்துக் கொஞ்சம் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். அதில் கத்திரிக்காயைச் சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்து, பக்கோடா போன்று எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வேறு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை பச்சை வாசனை போகும்வரை வதக்கி, பொரித்தெடுத்திருக்கும் கத்திரிக்காயை அதனுடன் கலந்து, உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, ஸ்பிரிங் ஆனியன் கொண்டு அழகுபடுத்திப் பரிமாறவும்.

Offline MysteRy

கத்திரிக்காய் ரோஸ்ட்



தேவையானவை:

கத்திரிக்காய் - 2
 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
 மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
 மல்லித்தூள் (தனியாத்தூள்) - கால் டீஸ்பூன்
 சீரகம் - 1 டீஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கத்திரிக்காயை வட்டவடிவில் வெட்டிக்கொள்ளவும். இதை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக் கலந்து, அதில் கத்திரிக்காயைப் போட்டுப் புரட்டி எடுக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, அதில் கத்திரிக்காய் இருபுறமும் நன்கு வேகுமாறு புரட்டி எடுத்துப் பரிமாறவும்.

Offline MysteRy

பிரின்ஜால் ஃப்ரை



தேவையானவை:

கத்திரிக்காய் - 4
கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசிமாவு - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கத்திரிக்காயைப் பிடித்த வடிவத்தில் வெட்டி தண்ணீரில் போட்டுவிடவும். சிறிது நேரம் கழித்து தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், சீரகம், மிளகுத்தூள், ஓமம், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கத்திரிக்காயின் மீது தடவி, வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், பக்கோடா பதத்தில் பொரித்து எடுக்கவும்.

Offline MysteRy

வழுதலங்காய் கறி



தேவையானவை:

கத்திரிக்காய் - 3
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 (இவை அனைத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, உப்பு ஆகியவற்றை குக்கரில் போட்டு வேகவைத்துக் கொள்ளவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு, வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, வேக வைத்த பொருட்களைப் போட்டுக் கிளறி இறக்கவும்.

Offline MysteRy

சிறு கத்திரிக்காய் தக்காளித் தொக்கு



தேவையானவை:

சிறு கத்திரிக்காய் - 4
 பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
 மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
 பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
 பூண்டு - 5 பல்
 கடுகு - 1 டீஸ்பூன்
 உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
பேஸ்டாக அரைக்க:
 மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்
 புளி - பெரிய எலுமிச்சை அளவு
 சீரகம் - அரை டீஸ்பூன்
 மிளகு - அரை டீஸ்பூன்
 காய்ந்த மிளகாய் - 2
 உப்பு - தேவையான அளவு
பேஸ்டாக கொடுத்தவற்றை வறுத்து மிக்ஸியில், சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

செய்முறை:

கத்திரிக்காயைக் கழுவி அடிப்பாகம் வரை நான்காக கீறி விட்டுக் கொள்ளவும். தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கத்திரிக்காயை 10 நிமிடம் ஊற வைக்கவும். பேஸ்டாக அரைத்ததை கத்திரிக்காயின் உள்ளே வைத்து 10 நிமிடம் தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெங்காயம் சேர்த்து வதக்கி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து கரைய வதக்கி, ஊறிய கத்திரிக்காயைச் சேர்த்து மெதுவாக புரட்டி விடவும். தீயை சிம்மில் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, மீதம் இருக்கும் அரைத்த பேஸ்ட், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக விடவும். கத்திரிக்காய் உடையாமல் புரட்டி வேக வைத்து எடுத்துப் பரிமாறவும்.

Offline MysteRy

சிலோன் பிரின்ஜால் மசாலா



தேவையானவை:

கத்தரிக்காய் - 5
பெரியவெங்காயம் - 2
தக்காளி - 1
பூண்டு - 10 பல்
இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) -
1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சோம்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
புளிக்கரைசல் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கத்திரிக்காயை நீளமாக வெட்டி தண்ணீரில் போட்டு முக்கி எடுத்து தண்ணீரை வடிய விடவும். ஒரு பாத்திரத்தில் இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். அந்தக் கலவையில் நீளமாக 6 துண்டுகளாக நறுக்கிய கத்திரிக்காயை நன்கு கலந்து ஊற விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் போட்டுப் பொரிய விடவும். பின்னர் பூண்டு, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதில் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, அதனுடன் புளிக்கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். கொதித்ததும் ஊற வைத்துள்ள கத்திரிக்காயைப் போட்டு மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைத்து, தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும்.

Offline MysteRy

கத்திரிக்காய் குழி மண்டி



தேவையானவை:

கத்திரிக்காய் - 5
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 5 பல்
தக்காளி - 1
பச்சைமிளகாய் - 4
அரிசி மண்டி (அரிசியைக் கழுவிய தண்ணீர்) - 2 கப்
எண்ணெய் - 2  டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - தேவையான அளவு
புளி - பெரிய எலுமிச்சை அளவு (திக்காக கரைத்துக் கொள்ளவும்)

செய்முறை:

வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சோம்பு, போட்டுத் தாளித்து பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் தக்காளி சேர்த்து வதக்கி கலவை போல் ஆக்கவும். இதில் சதுரமாக நறுக்கிய கத்திரிக்காயைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அரிசி மண்டி, புளிக்கரைசல், உப்பு சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டு இறக்கிப் பரிமாறவும்.