Author Topic: ஆசைக்கும் அளவுண்டோ!!!  (Read 1144 times)

Offline SweeTie

ஆசைக்கும் அளவுண்டோ!!!
« on: September 26, 2015, 06:11:06 AM »
பட்டாம் பூச்சியாய் பறக்க ஆசை
சிட்டுகுருவியாய் சிறகடிக்க ஆசை
மழையிலே உன்னுடன் சேர்ந்து நனைய ஆசை
மந்தார நேரத்தில் கைகோர்த்து நடக்க ஆசை
மரிக்கொழுந்து  வாசனையை அனுபவிக்க ஆசை
கொன்றை மலர்களை உன் கையால் சூடிக்கொள்ள ஆசை
செக்கச் சிவந்த என் நுனி மூக்கினால்  உன்
காதுகளை வருடிக் கொடுக்க ஆசை
பனித்துளி புல்லில் ஒட்டிக்கொள்வதுபோல் உன்மேல்
பட்டும் படாமலும் ஒட்டிக்கொள்ள  ஆசை
கடல் அலை ஓசையைக்  கேட்க ஆசை
மணலில் கோலம் போடும் கால் விரலில்
உன் கையால் மிஞ்சி போட்டுக்கொள்ள ஆசை
மலைச் சாரலில் தங்கி நிற்கும்
பறவைகளை ரசிக்க ஆசை
காற்றோடு காற்றாக  உன் கன்னத்தில்
கிள்ளி  விளையாடி முத்தமிட ஆசை
வானவில்லில் பச்சை நிறமாய் இருக்க ஆசை
மஞ்சள் வெயிலில் குளிர் காய ஆசை
கூடவே நீயும் சேர்ந்திருக்க ஆசை
நீல வானில் நிலாவை முகில்கள் மூடிக்கொள்வதுபோல்
உன்னை என் முந்தானையால்  மூடிக்கொள்ள ஆசை
உன் சட்டையில் பொத்தானைத் தைக்கும் சாக்கில்
உன் மார்பிலே முட்டிக்கொள்ள  ஆசை 
உன் இதயமெனும்  தொட்டியிலே
தங்க மீனாக தனித்திருக்க ஆசை
என் ஆசைகளுடன் சேர்த்து உன்னையும்
காலமெல்லாம் சுமக்க ஆசை
« Last Edit: September 26, 2015, 06:13:50 AM by SweeTie »

Offline JoKe GuY

Re: ஆசைக்கும் அளவுண்டோ!!!
« Reply #1 on: September 26, 2015, 08:24:10 AM »
ஆசை மழையில் மூச்சு திணற செய்து விட்டீர்கள்.மிக அருமை.நன்றாக இருக்கிறது.வாழத்துக்கள்
உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்

Offline NiThiLa

Re: ஆசைக்கும் அளவுண்டோ!!!
« Reply #2 on: September 26, 2015, 09:38:45 AM »
மிகவும் அருமை தோழி வார்த்தைகள் இல்லை
bhavadhi

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: ஆசைக்கும் அளவுண்டோ!!!
« Reply #3 on: September 26, 2015, 11:20:28 AM »
ஆசை எனையே ஆசை படவைத்த
அதி அழகு ஆசைகள் !!

வாழ்த்துக்கள் !!

Offline Dong லீ

Re: ஆசைக்கும் அளவுண்டோ!!!
« Reply #4 on: September 26, 2015, 08:00:39 PM »
உங்க ஆசையை  பாக்குற எல்லாருக்கும் ஆசை வந்திரும் கண்டிப்பா .கலக்குறிங்க ஸ்வீடி
இது போல் கவிதைகள் படிச்சிட்டே இருக்க எங்களுக்கும் ஆசை

ஆ'சை' :$

Offline ! Viper !

Re: ஆசைக்கும் அளவுண்டோ!!!
« Reply #5 on: September 26, 2015, 08:40:41 PM »
மிக  அருமை  எனது  தோழி ஸ்வீடி .. உங்கள்  ஆசையை  பார்த்து  எனக்கும்  அசை  வருகிறது :)..ஸ்டைல்    ந  சூப்பர்  ஸ்டார்,, கவிதை  ந ஸ்வீடி  ஸ்டார் (y) :D
Palm Springs commercial photography

Offline gab

Re: ஆசைக்கும் அளவுண்டோ!!!
« Reply #6 on: September 27, 2015, 11:27:40 PM »
ஆசைக்கு அளவில்லைதான் , அதே போலத்தான் உங்களின் கவிதை வரிகளில் துளிரும் ஆசை எங்களை என்றென்றும் சந்தோசபடுத்த அளவில்லா ஆசை. அடுத்த கவிதைக்காய் காத்திருக்கிறோம்.

AnonYmous

  • Guest
Re: ஆசைக்கும் அளவுண்டோ!!!
« Reply #7 on: September 27, 2015, 11:51:26 PM »
உங்கள் ஆசையை பார்த்து என் மனமும் ஆசை கொண்டது தோழி, அத்தனைக்கும் ஆசைபடு, அனைத்தும் நிறைவேற என் வாழ்த்துக்கள்  :) :) :)

Offline CybeR

Re: ஆசைக்கும் அளவுண்டோ!!!
« Reply #8 on: September 28, 2015, 11:55:47 PM »
unga sweet ahna asai kavithai  sooper ji..idai pool  ungalkum asai ya asai ya yella vara vendum and innum nariya asai yaa naangal unga kavithai eh padikaa nariya asaiyana  kavithai eh kudunga tholi .god bless

Offline SweeTie

Re: ஆசைக்கும் அளவுண்டோ!!!
« Reply #9 on: September 29, 2015, 02:03:58 AM »
தோழி நித்திலா, தோழர்கள் Jokeguy , ஆசைஅஜித், டான்க்லீ, viper ,
Gab , anonymous  சைபர்  அனைவருக்கும்  எனது நன்றிகள்.   உங்கள் அனைவரையும்
எனது கவிதை கவர்ந்துள்ளதுள்ளது  என  அறிந்து பெருமை அடைகிறேன்.  உங்கள்
வாழ்த்துகள்தான் என்னைப் போன்ற கவிஞர்களை  வாழ வைக்கும்.

THANK YOU.......THANK YOU..........THANK YOU [/color]

Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: ஆசைக்கும் அளவுண்டோ!!!
« Reply #10 on: October 01, 2015, 10:34:50 PM »
migavum arumaiyana varigal aasaigal ungaladhu aasaigal niraivera vazhthukkal innum thondranthu kavithai elutha vazhthukkal sweetie....