Author Topic: ~ வாசகிகள் கைமணம் மசாலா மஞ்சூரியன்...ஹெல்தி கீர்! ~  (Read 573 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226930
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இட்லி மஞ்சூரியன்



தேவையானவை:

 இட்லி - 8, மைதா மாவு, கார்ன்ஃப்ளார் (சோள மாவு), கடலை மாவு - தலா 2 டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு, சோயா சாஸ், பச்சை சில்லி சாஸ் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

இட்லிகளை விரல் நீள துண்டுகளாக வெட்டவும். மாவு வகைகளுடன் இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள், சாஸ் வகைகள், கேசரி கலர் ஆகியவற்றைக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும். இட்லித் துண்டுகளை இந்தக் கலவையில் புரட்டி, சூடான  எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.
இதற்கு தக்காளி சாஸ் தொட்டுக் கொள்ளலாம்.

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226930
  • Total likes: 29030
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கேரட் - ஸ்வீட் பொட்டேட்டோ கீர்



தேவையானவை:

 ஸ்வீட்பொட்டேட்டோ (சர்க்கரை வள்ளிக் கிழங்கு) - 2, கேரட் துருவல் - அரை கப், உருளைக்கிழங்கு - 2, வெல்லத்தூள் - அரை கப், பால் - 2 டம்ளர், துருவிய பாதாம் - தேவையான அளவு, பேரீச்சை - 6.

செய்முறை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி நன்றாக மசிக்கவும். பேரீச்சையை கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கி, கேரட் துருவலுடன் சேர்த்து பாலில் வேகவிடவும். வெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி, லேசான கம்பிப் பாகு வைக்கவும்.
கேரட் வெந்தவுடன் கிழங்கு விழுதைச் சேர்த்து பாகு நீரையும் விட்டு நன்றாகக் கிளறி இறக்கவும் (கெட்டியாக இருந்தால், காய்ச்சி ஆறவைத்த பால் சிறிதளவு  சேர்க்கலாம்). மேலாக பாதாம் துருவல் தூவி பரிமாறவும்.
இதனை குளிர வைத்தும் சாப்பிடலாம். சத்துகள் நிறைந்த இந்த `கீர்’, குழந்தைகளைக் கவரும்.