Author Topic: ~ சைவ உணவுகளில் அசைவ உணவுகள்.... ~  (Read 365 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227495
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
சைவ உணவுகளில் அசைவ உணவுகள்....



சிப்ஸ், பாக்கெட் மற்றும் டின் உணவுகளில் விலங்குக் கொழுப்பு, வெள்ளை சர்க்கரையில் கால்நடைகளின் எலும்புத் தூள், ரெடிமேட் ஆரஞ்ச் ஜூஸ், சில வகை பானங்களில் மீன் எண்ணெய், கம்பளியிருந்து எடுக்கப்படும் லனோலின், பூச்சியிலிருந்து எடுக்கப்படும் கார்மைன் (E 120) என்ற நிறமூட்டி ஆகியவை மறைமுகமாகச் சேர்க்கப்படுகின்றன.

பேக்கரி உணவுகள், சூயிங் கம், ஜெல்லி மிட்டாய், ஜாம், காப்ஸ்யூல் மாத்திரைகளில், விலங்குகளின் முடியிலிருந்து, தயாரிக்கப்படும் எல்-சிஸ்டீன் (L-Cysteine), விலங்குத் தோல், கேப்ரிக் அமிலம் (Capric acid) ஆகியவை உள்ளன. இனிப்புகளின் மேல் முடப்படும் வெள்ளித்தாள், மாட்டுக் கொழுப்பால் தயாராகிறது. கால்நடைகளின் எலும்புத் தூளான ‘போன் பாஸ்பேட்’, செயற்கை பான பொடிகளில் சேர்க்கப்படுகிறது.

விளைவுகள்: அலர்ஜி, ஆஸ்துமா, தொடர் தும்மல், சரும பிரச்னை, உடல் பருமன், வயிறுத் தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கலப்படம் இல்லாத சைவ உணவுகளைச் சாப்பிட விரும்புவோர், ‘வீகன் குறியீடு’ இருக்கிறதா எனப் பார்த்து வாங்கலாம்.

பிடித்தால் அனைவருடனும் பகிருங்கள்