Author Topic: ~ சுக்கு பொடி தோசை ~  (Read 333 times)

Online MysteRy

~ சுக்கு பொடி தோசை ~
« on: September 25, 2015, 12:03:55 PM »
சுக்கு பொடி தோசை



தேவையானவை:

பச்சரிசி – 3 கப்,
புழுங்கல் அரிசி – 1 கப்,
கருப்பு உளுந்து – 1 கப்,
சோள மாவு – ஒரு கைப்பிடி,
பெருங்காயம் – 1 தேக்கரண்டி,
மிளகு – 1 தேக்கரண்டி,
சீரகம் – 1 தேக்கரண்டி,
சுக்கு, இஞ்சி – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு
நெய் – தேவையான அளவு

செய்முறை:

• பச்சரிசி, புழுங்கல் அரிசி, கருப்பு உளுந்து, சோளம் இவை அனைத்தையும் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

• ஒரு கடாயில், சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பெருங்காயம், மிளகு, சீரகம், சுக்கு, இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்சியில் பவுடராக அரைத்து கொள்ளவும்.

• தோசை கல்லை அடுப்பில் வைத்து மாவை ஊற்றி வெந்ததும் தோசையின் மேல் சிறிதளவு சுக்குப்பொடி தூவி, நெய் ஊற்றி எடுத்தால், சுவையான சுக்கு பொடி தோசை ரெடி.