Author Topic: ~ செல்வமகள் சேமிப்பு திட்டம்! ~  (Read 725 times)

Offline MysteRy

செல்வமகள் சேமிப்பு திட்டம்!



:::மத்திய அரசாங்கத்தின் செல்வமகள் சேமிப்பு திட்டம்.::
ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு சேமிக்கலாம். 9.1% வட்டியுடன் உங்கள் சேமிப்பு எந்த வரி பிடித்தம் இல்லாமல் திரும்ப கிடைக்கும்.
ஒரு ஆண்டில் குறைந்தது ரூ 1000 இந்த திட்டத்தில் செலுத்த வேண்டும் - நாள் வாரம் மாதம் என்று எத்தனை தவணையாக வேண்டுமானாலும் செளுத்தாலம் அதிக பட்சம் ரூ 1.5 லட்சம் வரை செலுத்தலாம்.
- இந்திய அஞ்சல் துறை சார்பில் “செல்வமகள் சேமிப்பு கணக்கு” திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் அறிமுகம் செய்தது.
- இத்திட்டம் 11 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தை உடையவர்களுக்கு மட்டும்.
-மாதம் ரூ.500 செலுத்துகிறோம் என்றால், 14 ஆண்டுகளுக்கு ரூ.84 ஆயிரம் செலுத்தி, 21-வது ஆண்டில் ரூ.3,03,564 பெற வாய்ப்பு உள்ளது.
- தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு சேமிக்கலாம். முதிர்வு தேதி குழந்தையின் 18-வது வயது ஆண்டில் தொடங்குகிறது.
- கல்வி மற்றும் திருமணத் தேவைக்கு, கட்டிய தொகையில் இருந்து 50 சதவீதத்தை வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம் அல்லது உங்கள் குழந்தை 18 வயது அடையும் தருவாயில் இந்த கணக்கு இடை நீக்கம் செய்ய முடியும் அல்லது குழந்தையின் 21 வயது வரை காத்து இருந்து முழு வட்டியுடன் பெற்றுக்கொள்ளலாம்.
- இதற்கு வருமான வரி சலுகை உள்ளது.
- பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம்.
- விண்ணப்பத்துடன் குழந்தையின் பிறந்த தேதி சான்று, பெற்றோர் அல்லது பாதுகாவலரின் அடையாள சான்று, அவர்களது புகைப்படத்தை இணைத்து ஒப்படைக்க வேண்டும்.
- உங்கள் குழந்தை இந்த கணக்கை அவர்கள் படிப்பு திருமணதிற்கு பின்பும் தொடரலாம்.
முகம் தெரியாத தனியார் நிதி நிறுவனத்திடம் பணத்தை கொடுத்து தலையில் துண்டு போட்டு கொள்வதற்கு பதில் அரசாங்க சேமிப்பு திட்டங்களை பயன்படுத்துங்கள்.
மேலும் தகவல்களுக்கு அருகில் உள்ள இந்திய அஞ்சல் துறை அலுவலகத்தை அனுகவும்.

(டி.என்.எஸ்) பெண் குழந்தைகள் உயர் கல்வி பெற வேண்டும், பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் மத்திய அரசு சுகன்யா சம்ருத்தி யோஜனா என்ற சேமிப்பு திட்டத்தை தபால் நிலையங்களில் கொண்டு வந்தது.

இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டம் என எளிமையாக பெயரிடப்பட்டது. இத்திட்டம் தொடங்கிய 2 மாதத்திற்குள் தமிழ்நாட்டில் நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை சேமிப்பு கணக்குகளை தொடங்கி பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர்.

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இத்திட்டம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் பெயரில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் கணக்கு தொடங்கலாம்.

ஒரு குடும்பத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு மட்டுமே கணக்கு தொடங்க முடியும். குறைந்த பட்சம் ரூ.1000 முதல் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை பணம் செலுத்தலாம்.

14 வருடங்கள் பணம் செலுத்த வேண்டும். 21–வது ஆண்டில் டெபாசிட் முதிர்ச்சி அடைந்து முழு பலன் கிடைக்கும். 18 வயது பூர்த்தி அடைந்து விட்டால் திருமணத் தேவைக்காக பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். இத்திட்டத்தில் ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் கட்டலாம்.

உதாரணத்திற்கு ஒரு வயது பெண் குழந்தையின் பெயரில் மாதம் ரூ.1000 வீதம் வருடத்திற்கு ரூ.12 ஆயிரம் டெபாசிட் செய்யப்படுகிறது. 14 வருடங்களுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் மொத்தம் அவர் செலுத்துகிறார். அந்த பெண் குழந்தை தனது 21 வயதில் ரூ.6 லட்சத்து 7128 தொகை பெறும்.

இதே போல ஆண்டுக்கு ரு.1½ லட்சம் டெபாசிட் செய்யும்போது 14 வருடத்திற்கு அவர் ரூ.21 லட்சம் செலுத்துவார். 21 வயதில் அந்த பெண் குழந்தைக்கு ரூ. 78 லட்சத்து 90 ஆயிரம் கிடைக்கும்.

செல்வ மகள் சேமிப்பு திட்டம் பற்றி தெரிந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள தபால் நிலையங்களில் டெபாசிட் செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 72 ஆயிரம் பெண் குழந்தைகள் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 37 கோடி டெபாசிட் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்சாண்டர் கூறியதாவது:

இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கு ஒரு அருமையான திட்டமாகும். தமிழகத்தில் அமோக வெற்றி அடைந்துள்ளது. சென்னை மண்டலத்தில் ஒரு லட்சத்து 4 ஆயிரம் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.37 கோடி டெபாசிட் கிடைத்துள்ளது.

தபால் துறையில் அதிக வட்டி கொடுக்கக்கூடிய திட்டமாக இது அமைந்துள்ளது. மூத்த குடிமக்கள் டெபாசிட்டிற்கு அடுத்ததாக இத்திட்டத்திற்கு 9.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 5 லட்சம் கணக்குகளும் சென்னை மண்டலத்தில் 1.5 லட்சம் கணக்குகளும் தொடங்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை கண்டிப்பாக நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

பொதுமக்கள் சேமிப்பு கணக்கு தொடங்க வசதியாக முக்கிய தபால் நிலையங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கவும், உதவி செய்யவும் ஆட்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மேலும் அனைத்து தபால் நிலையங்களும் செயல்படும். சென்னை மண்டலத்தில் 158 தபால் நிலையங்கள் உள்ளன. இத்திட்டம் குறித்து தகவல் பெற உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 044–28521989, 28592827, 94430–48028 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.