Author Topic: ~ மசாலா பொடி! ~  (Read 369 times)

Offline MysteRy

~ மசாலா பொடி! ~
« on: September 23, 2015, 08:38:34 PM »
மசாலா பொடி!

வீட்டில் எப்போதும் ஒரு மசாலா பொடியை மொத்தமாக அரைத்து  இது சாம்பார், புளிக்குழம்பு, மீன் குழம்பு, வத்தக்குழம்பு எனப் பல குழம்புகளுக்கும் பயன்படுத்தத்தக்க மல்ட்டி பர்ப்பஸ் பொடியாகும். பெரிய குடும்பத்துக்கு இரண்டு மாதங்களுக்குப் போதுமான அளவு இது...

தேவையானவை

மிளகாய் வத்தல் – 3/4 கிலோ
மல்லி (தனியா) விதை –
1 கிலோ
சீரகம் - 400 கிராம்
கடலைப் பருப்பு – கால் கிலோ
மிளகு - 50 கிராம்
வெந்தயம் -100 கிராம்
விறலிமஞ்சள் – கால் கிலோ
மிளகாய் வத்தலையும் மல்லி விதையையும் பெரிய தாம்பாளத்தட்டில் அல்லது முறத்தில் பரத்தி, நல்ல வெயிலில்  இரண்டு மணி நேரம் காயவைக்க வேண்டும். பிறகு, மேலே சொல்லப்பட்ட ஒவ்
வொன்றையும் தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்து, தட்டில் மீண்டும் கொட்டி ஆறவைக்க வேண்டும். பிறகு, அதை அப்படியே பெரிய தூக்குவாளியில் கொட்டி, மாவு அரைக்கும் மில்லுக்குக் கொண்டுபோய் அரைத்து, இரண்டு மணி நேரம் ஆறவைத்த பிறகு, காற்றுப்புகாத டப்பாக்களில் போட்டு வைத்துக்கொண்டு, கைபடாமல் ஸ்பூனில் எடுத்துப் பயன்படுத்தலாம்.