Author Topic: ~ வட்டலப்பம் ~  (Read 359 times)

Offline MysteRy

~ வட்டலப்பம் ~
« on: August 30, 2015, 10:47:35 PM »
வட்டலப்பம்



பழைய புழுங்கல் அரிசி – 3 கப்
தேங்காய் துருவல் – அரை கப்
சீனி – 3/4 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – கால் கப்
ரவா – கால் கப்
திராட்சை – 2 மேசைக்கரண்டி
முந்திரி – 12

புழுங்கல் அரிசியை 8 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை கழுவி அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும்.

அரைத்த மாவுடன் உப்பு, ரவா மற்றும் சீனி சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். முதல் நாளே அரைத்து வைத்து மறுநாள் செய்யவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்லவும்.

ஒரு தட்டில் நெய் தடவி குழிக்கரண்டியால் 3 கரண்டி மாவை ஊற்றி மேலே வறுத்த முந்திரி, திராட்சையை போடவும்.

இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இட்லி பானையின் உள் ஏதேனும் ஒரு உயரமான பாத்திரத்தை வைத்து அதன் மேல் வட்டலப்ப தட்டை வைத்து மூடி 10 நிமிடம் வேக விடவும்.

வெந்ததும் வெளியில் எடுத்து ஆறியதும் கத்தியை வைத்து முதலில் ஓரங்களை சுற்றிலும் எடுத்து விடவும். பின்னர் துண்டுகளாக்கவும்.

சுவையான வட்டலப்பம் ரெடி.