Author Topic: ~ தோல் தொடர்பான வியாதிகளை குணமாக்கும் கோடம்புளி ~  (Read 419 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226856
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
தோல் தொடர்பான வியாதிகளை குணமாக்கும் கோடம்புளி



இதற்கு கொறுக்காய்புளி, Brindal Berry, & Tom Rong என்ற வேறு பெயர்களும் உள்ளன. கோடம்புளி மரவகையைச் சேர்ந்தது. இதற்கு கரிசல் மற்றும் செம்மண்ணில் நன்கு வளரும். இது இந்தியா மற்றும் இன்தோனேசியாவைத் தாயகமாகக் கொண்டது. கேரளாவில் அதிகம் வளர்க்கப்படுகிறது.

கோடம்புளி பழத்தைக் காய்ந்த பின் பொடி செய்து சமையலுக்குப் பயன்படுத்துகிறார்கள் மேலும் மருத்துவத்திற்கும் பயன்படுத்திகிறார்கள். இதில் 'சி' வைட்டமின் உள்ளது. இதில் Hepatotoxic hydroxycitric acid என்ற அமிலசத்துக்கள் உள்ளது. இது உடலின் எடையைக் குறைக்க மிகவும் பயன்படுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

இருதயம் பலம் பெற்று நோய்வராமல் காக்கிறது. இது தொண்டை, மூத்திரப்பாதை மற்றும் கற்பப் பைகளில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துகிறது. மருத்துவர் கொடுக்கும் அளவான பொடிகளை அருந்த வேண்டும். இது தோல் தொடர்பான வியாதிகள், வெளிப்புண்கள், உதடு வெடிப்பு, கைகால் வெடிப்பு, குடல்புண் நோய்கள், அஜீரணத்திற்கும் நல்ல மருந்து. இந்த மருந்துகள் வெளி நாட்டில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.