Author Topic: ~ விரல்கள் செய்யும் விந்தை! சம ஆற்றல் தரும் சமான முத்திரை ~  (Read 444 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226856
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
விரல்கள் செய்யும் விந்தை! சம ஆற்றல் தரும் சமான முத்திரை


நமது உடலில் பஞ்சபூதங்களின் ஆற்றல்கள் உள்ளன. விரல்கள் இதன் சக்தி மையங்களாக செயல்படுகின்றன. கட்டை விரல் - அக்னி, ஆள்காட்டி விரல் - வாயு, நடு விரல் - ஆகாயம், மோதிர விரல் - நிலம், சுண்டு விரல் - நீர். இந்த ஐம்பூதங்களின் ஆற்றல் உடலில் சமஅளவில் இயங்கும்போது, உடலிலும் மனதிலும் சமநிலை ஏற்படுகிறது. இந்த சமவிகிதத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்போது, அது நோயாக உருவெடுக்கிறது.
பஞ்சபூதங்களில் மண் அதிகமானால், உடலின் எடை அதிகரித்து மந்தத்தன்மை ஏற்படும். இதுவே குறைந்தால், தசைகளும் எலும்புகளும் வலுவிழக்கும். நீர் அதிகமானால், கை, கால் மற்றும் முகத்தில் வீக்கம் வரும். இது குறைந்தால், சரும வறட்சி, தாகம், வயதான தோற்றம் ஏற்படும். நெருப்பு அதிகமானால், உடல் வெப்பம் அதிகரிக்கும். குறைந்தால், ஹார்மோன் குறைபாடுகள் உண்டாகும். வாயு மற்றும் ஆகாய பூதங்கள் அதிகமானாலும் குறைந்தாலும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகள் வரும். எனவேதான் ஐம்பூதங்களும் சமநிலையில் இருக்க வேண்டும் என்கிறார்கள். இதற்கான எளிய வழி, சமான முத்திரை. ஐம்பூதங்களும் சமநிலையாவதால், உடலுக்கு அபரிமிதமான ஆற்றல் கிடைக்கிறது.



பலன்கள்

உடல் மற்றும் மனதின் சக்திநிலை அதிகரிக்கிறது.

அனைத்து உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும். குறிப்பாக, மூளை சுறுசுறுப்படையும்.

பல நாட்களாகப் படுத்தபடுக்கையாக இருப்பவர்களும் இந்த முத்திரையை 40 நிமிடங்கள் செய்துவர, தெம்பு கிடைக்கும்.

உடலின் எந்தப் பகுதியிலாவது தீராத வலி இருந்தால், இந்த முத்திரையைச் செய்வதன் மூலம் வலி குறைவதை உணரலாம்.

தினந்தோறும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்துவர நல்ல மாற்றத்தை உணர முடியும்.

கைவிரல்கள், வயிறு, தோள்பட்டை, முழங்கை, முன்கை, உள்ளங்கால், தொடை ஆகிய பகுதிகளில் ஏற்படும் வலிகள் சரியாகும்.

தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள், அதிகாலையில் 20 நிமிடங்கள் செய்யலாம். மனதில் உற்சாகம் பிறந்து, சுறுசுறுப்பாகத் தயாராக முடியும். தன்னம்பிக்கை, மன உறுதி ஆகிய நல்லுணர்வுகள் உருவாகும்.

தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் செய்துவந்தால், ஆண்களுக்கு விந்தணு வீரியத்தன்மையில் உள்ள குறைபாடு நீங்கும்.

நீச்சல், ஓட்டப்பந்தயம், பளுத் தூக்குதல், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் ஈடுபவர்கள், தினமும் செய்துவந்தால் மனம் உறுதியாகும். உடல் சோர்வு அடையாது.

வேலைச் சுமை காரணமாக ஏற்படும் அலுப்பு, முதுகு வலி, கழுத்து வலி போன்ற உடல் வலிகள் சரியாகும்.

எந்த முத்திரை நமக்குச் சரி எனத் தெரியாதவர்கள், ஒரே நாளில் இரண்டு, மூன்று முத்திரைகள் செய்ய முடியாதவர்கள், சமான முத்திரையை மட்டும் செய்தாலே போதும், நல்ல தீர்வு கிடைக்கும்.

எப்படிச் செய்வது?

ஐந்து விரல்களையும் குவித்து, கட்டை விரல் நுனியை மற்ற நான்கு விரல்களின் நுனிகளும் தொட்டுக்கொண்டிருக்கும்படி வைக்கவேண்டும்.

கட்டளைகள்

சம்மணம் இட்டு அமர்ந்த நிலையில் செய்யலாம். முதுகுத்தண்டு நிமிர்ந்து நாற்காலியில் அமர்ந்து,  பாதங்களைத் தரையில் பதித்தபடி செய்ய வேண்டும். நின்ற நிலையில் செய்யக் கூடாது.

முத்திரை செய்யும்போது, உள்ளங்கையும் விரல்களும் மேல்நோக்கி இருக்க வேண்டும்.

ஐந்து முதல் 20 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
அனைவரும் செய்யலாம்.